News December 18, 2024

காங்கிரஸ் தான் அம்பேத்கருக்கு எதிரானது: அமித்ஷா தாக்கு

image

<<14910754>>அம்பேத்கர் பற்றிய சர்ச்சைக்கு<<>> விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தான் உண்மைகளை திரித்துக் கூறுவதாக குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் தான் அம்பேத்கருக்கு எதிரானது, இட ஒதுக்கீட்டுக்கும் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது, வீர சாவர்க்கரை அவமதித்தது, எமர்ஜென்சியை திணித்தது, அரசியலமைப்பின் அனைத்து விழுமியங்களையும் காங்கிரஸ் மீறியதாகவும் அவர் விமர்சித்தார்.

News December 18, 2024

உயரும் கடல்நீர் மட்டம்: சென்னைக்கு ஆபத்து?

image

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1993-2020 காலகட்டத்தில் சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அமைச்சரின் இந்த அறிக்கையால், தமிழகத்தை சுற்றிய கடல் பகுதியில் நீர்மட்டம் உயர்வது தெரிய வந்துள்ளது. இதுபோல் கடல்நீர் மட்டம் அதிகரித்தால் சென்னைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News December 18, 2024

இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!

image

97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட குறும்படம் ‘Anuja’. Live Action Short Film பிரிவில் 180 படங்களுடன் போட்டியிட்ட இப்படம், ‘டாப்-15’ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. ஆடம் கிரேவ்ஸ் இயக்கியுள்ள இப்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்னையைப் பற்றி பேசுகிறது. The Elephant Whisperers குனீத் இதில் பணியாற்றி இருப்பதால் இது ஆஸ்கர் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

News December 18, 2024

இணையும் எதிராளிகள்: மாறும் போட்டிக் களம்

image

எதிர் எதிர் துருவங்களாக இருந்த இரு கார் தயாரிப்பாளர்கள் இணைய முடிவு செய்துள்ளனர். ஜப்பான் கார் நிறுவனங்களான ஹோண்டா மற்றும் நிஸான் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சீனாவில் எலெக்ட்ரிக் கார் ட்ரென்டால் இருவரும் சந்தையில் சரிவை சந்தித்தனர். US-ல் நிஸானுக்கு மோசமான சரிவு. இந்த நிலையில் எதிர்கால R&D-ல் ஒன்றாக செயல்படவும் ஒருவரை ஒருவர் காக்கவும் இந்த முடிவு எனக் கூறப்படுகிறது.

News December 18, 2024

தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் மீண்டும் மோதல்!

image

அண்ணாமலை பல்கலை., துணைவேந்தரைத் தேர்வு செய்வது பற்றிய அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் R.N.ரவி வலியுறுத்தியுள்ளார். துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் UGC தலைவர் பரிந்துரைத்த நபர் இல்லாதது விதிமீறலாகும். விதிகளுக்குப் புறம்பான இம்முடிவை கைவிட்டு, தான் அமைத்த குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றார்.

News December 18, 2024

பத்திரிகையாளர்கள் குடும்ப உதவி நிதி அதிகரிப்பு

image

பத்திரிகையாளர்களின் குடும்ப நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, 20 ஆண்டுகள் பத்திரிகைகளில் பணிபுரிந்து இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ₹ 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு பணிபுரிந்து இறந்தால் ₹ 7.5 லட்சமும், 10 ஆண்டு பணிபுரிந்து இறந்தால் ₹ 5 லட்சமும், 5 ஆண்டு பணிபுரிந்து இறந்தால் ₹ 2.5 லட்சமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

அமித்ஷாவின் சாதிவெறி மனநிலை வெளிப்பட்டது: மம்தா

image

அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பாஜகவின் மதவெறி, சாதிவெறி, தலித் எதிர்ப்பு மனநிலையை அமித்ஷாவின் பேச்சு காட்டுகிறது. 240 இடங்கள் வைத்துள்ள போதே இப்படி பேசும் பாஜகவினர், ஒருவேளை 400 இடங்களை வென்றிருந்தால், அம்பேத்கரின் பங்களிப்பை முற்றிலும் அழித்து, வரலாற்றை மாற்றி எழுதியிருப்பர்” என சாடியுள்ளார்.

News December 18, 2024

இதுதான் பாஜகவின் ஒரே வேலைத்திட்டம்: ராகுல் காந்தி

image

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என அமித்ஷா பேசியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அம்பேத்கருக்கும், அவரது கொள்கைகளுக்கும் பாஜகவினர் எதிரானவர்கள். அமித்ஷாவின் பேச்சு இதைத்தான் காட்டுகிறது. அம்பேத்கர் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை ஒழித்துக்கட்டுவதே பாஜகவின் ஒரே வேலைத்திட்டம் என சாடியுள்ளார்.

News December 18, 2024

அமித் ஷாவை விளாசி தள்ளிய சீமான்!

image

அம்பேத்கர் பெயரை கூறுவது ஃபேஷனாகிவிட்டது என விமர்சித்த அமித் ஷாவுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஓயாமல் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அயோத்தியில் வென்றார். அறிவாசான் அம்பேத்கர் பெயரை சொன்னாலே, வாழும் பூமியை சொர்க்கமாக்கி விடலாம் என சீமான் கூறியுள்ளார்.

News December 18, 2024

2024ல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு Good Bye சொன்னவர்கள்

image

இந்த ஆண்டில் மட்டும் 28 வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அஷ்வின், தவான், ரித்திமான் சஹா, கேதர் ஜாதவ், சித்தார்த் கவுல், சௌரப் திவாரி, தினேஷ் கார்த்திக், வருண் ஆரோன், வார்னர், பரிந்தர் சரன் உள்ளிட்ட 22 வீரர்கள், அனைத்து ஃபார்மெட்களிலும் ஓய்வு பெற்றுள்ளனர். கோலி, ரோஹித், ஜடேஜா உள்ளிட்ட 6 பேர் குறிப்பிட்ட ஃபார்மெட்களில் மட்டும் ஓய்வு அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!