News December 19, 2024

EPSக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை சென்னை HC தள்ளுபடி செய்தது. விளம்பர நோக்கத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

News December 19, 2024

24,000 support levelஐ உடைத்த நிஃப்டி

image

இந்திய பங்குச்சந்தையில் தேசிய குறியீட்டெண் நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து, 24,000 support level-க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதும், FII பங்குகளை விற்பதும் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. US பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டியை 0.25% குறைத்தது இந்தியாவுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. எனினும், 2025இல் 2 ரேட் கட் மட்டுமே இருக்கும் என்பதை சந்தை ஏற்கவில்லை.

News December 19, 2024

ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

image

டெல்லியில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News December 19, 2024

வேற எதுலயாவது இவளோ ஆர்வம் இருந்திருக்கா ப்ரோ?

image

கொடைக்கானலில் சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்கு போதைக் காளானை தேடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், இப்படி மற்ற போதைகளை தேடி அலைவது “நாடு எங்கே செல்கிறது?” என்று கேட்க வைக்கிறது. இதற்கெல்லாம் யார்தான் வேலி போடுவது? நீங்களே சொல்லுங்க.

News December 19, 2024

தங்கம் விலை ₹520 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹520 குறைந்தது. நேற்று ₹57,080ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ₹56,560ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ₹7,135க்கு விற்பனையான நிலையில் இன்று ₹65 குறைந்து ₹7,070க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹99க்கு விற்பனையாகிறது.

News December 19, 2024

ருத்ர தாண்டவம் ஆடிய ‘சீடோ’ புயல்

image

இந்தியப் பெருங்கடலில் உருவான ‘சீடோ’ புயல் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கிறது. மிக தீவிர புயலாக இருந்த சீடோ, அப்பகுதியில் இருந்த தீவுக்கூட்டங்கள், மொசாம்பிக்யூ ஆகிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

News December 19, 2024

பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது நாளாக இன்றும் கடும் சரிவினை சந்தித்திருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்திலேயே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 300 புள்ளிகளை இழந்து 23,883 புள்ளிகளிலும் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகளை இழந்து 79,160 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகிறது. கடந்த 5 நாள்களில் இந்திய பங்குச்சந்தைகள் சுமார் 5% சரிந்திருக்கின்றன.

News December 19, 2024

அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்வது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற அவைகளில் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. அம்பேத்கர் பற்றி அமித் ஷா தவறாக பேசியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், அமித் ஷா அவையில் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

News December 19, 2024

அமித் ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

image

அம்பேத்கரை அவமதித்ததாக கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இன்று காலை 11.30 மணிக்கு திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அமித் ஷாவை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட்டில் அவர் அம்பேத்கர் குறித்து பேசியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2024

எதுக்கு மூனு ஓட்டு போடனும்?

image

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் நடிகர் Y.G.மகேந்திரன். ”தேர்தல் நேரத்தில் யாருக்கு பிடிக்குதோ அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு போயிட்டே இருக்கனும். எதுக்கு ரெண்டு தடவை, மூனு தடவை ஓட்டு போடனும்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்தை பதிவு பண்ணுங்க.

error: Content is protected !!