News December 19, 2024

WTC பைனலுக்கு செல்லுமா இந்தியா!

image

காபா டெஸ்ட் டிரா ஆனதால் WTC இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது. IND நேரடியாகத் தகுதிபெற அடுத்த இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும். AUS-SL தொடரை 2-0 என்ற கணக்கில் AUS வென்றாலும், IND பைனலுக்கு செல்லும். மாறாக 2-1 என்ற கணக்கில் வென்றால், AUS-SL தொடரை AUS 1-0 என்ற கணக்கிலும், SA-PAK தொடரை 1-0 என்ற கணக்கில் அல்லது 2-0 என PAK வெல்ல வேண்டும் அல்லது 2-2 என டிரா ஆக வேண்டும்.

News December 19, 2024

அம்பேத்கரின் சிந்தனைதான் நவீன இந்தியா: கமல்

image

நவீன இந்தியாவின் கட்டுமானத்திற்கு அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து நாட்டை விடுவித்தவர் அம்பேத்கர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மாண்பு சிதைக்கப்படுவதை எந்த இந்தியரும் சகித்து கொள்ளமாட்டார் எனவும் கூறியுள்ளார்.

News December 19, 2024

ராகுல் காந்தி மீது போலீஸில் புகார்?

image

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும், பாஜக எம்.பி.க்களுக்கும் இடையே இன்று பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தனர். ராகுல் காந்தி தான் தங்கள் மீது காங். எம்.பி.க்களை தள்ளிவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ராகுல் மீது போலீஸில் புகார் அளிப்பது குறித்து பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

News December 19, 2024

அமைதியோ அமைதியில் இபிஎஸ்: அமைச்சர்

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, இஸ்லாமிய சமூகத்தை இழிவாக பேசிய நீதிபதி என அனைத்து விவகாரத்திலும் இபிஎஸ் அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். அமித்ஷாவை கண்டிக்க கூட வேண்டாம், ‘வலிக்காமல் வலியுறுத்தலாமே’ எனவும், யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் அவரை கண்டால், யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் எனவும் அமைச்சர் நகைச்சுவையுடன் சாடியுள்ளார்.

News December 19, 2024

அமெரிக்காவின் மாகாணமாகுமா கனடா?

image

அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைந்து கொள்ளும்படி கனடாவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார் அமெரிக்காவின் அடுத்த அதிபரான டொனால்ட் டிரம்ப். கனடா தனது ராணுவத்துக்கு செலவு செய்வது போக அமெரிக்காவும் 100 மில்லியன் டாலர் உதவி செய்கிறது. இதை குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்க மாகாணமாகி விட்டால், கனடா நாட்டவருக்கு வரி குறையும், வருமானம் அதிகரிக்கும், செலவும் மிச்சமாகும் என்று ஆலோசனை கூறுகிறார்.

News December 19, 2024

அரைசதம் அடித்த ‘லக்கி பாஸ்கர்’

image

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான ‘லக்கி பாஸ்கர்’ ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 50வது நாளை கடந்துள்ளதாக, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் கடந்த நவ.28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும், தியேட்டருக்கு வந்து பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உங்கள் இந்த படம் பிடிக்குமா?

News December 19, 2024

மருந்து பெட்டகம் வழங்கினார் CM ஸ்டாலின்

image

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அந்தவகையில், ஈரோட்டில் இன்று 2 கோடியாவது பயனாளியான, 100 நாள் வேலை திட்ட தொழிலாளி சுந்தராம்பாளின் வீடு தேடிச் சென்று மருந்துப் பெட்டகத்தை CM ஸ்டாலின் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் மட்டும் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 2 நாள் பயணமாக அம்மாவட்டம் சென்றுள்ள ஸ்டாலின், அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

News December 19, 2024

BJP எம்பிக்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்த PM மோடி

image

பார்லிமென்ட் வளாகத்தில் இருதரப்பு எம்பிக்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயமடைந்து ஹாஸ்பிட்டலில் உள்ள BJP எம்பிக்கள் உடல்நிலை குறித்து PM மோடி கேட்டறிந்தார். முன்னதாக ஹாஸ்பிட்டலுக்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்டோர், எம்.பிக்கள் <<14921490>>முகேஷ் ராஜ்புத்<<>>, பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோ உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

News December 19, 2024

வங்கி ஊழியருக்கு காது வெட்டு.. கஸ்டமர் போல் வந்தவர் பகீர்

image

சென்னை T.நகர் பர்க்கிட் சாலை HDFC வங்கிக்குள் புகுந்த நபர், ஊழியர் ஒருவரின் காதை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்தவர், ஊழியர் தினேஷை சரமாரியாக வெட்டியதில் அவரது காது மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தினேஷை அரிவாளால் வெட்டிய நபரை மடக்கிப் பிடித்த சக ஊழியர்கள் மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News December 19, 2024

சபரிமலை ஐயப்பனை தரிசித்த சசிகுமார்!

image

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சபரிமலை ஐயப்பனை தரிசித்து உள்ளார். மாலை அணிந்து 48 நாள்கள் ஐயப்பனுக்கு விரதமிருந்து அவர் இருமுடி கட்டி சக அய்யப்ப பக்தர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சசிகுமார் தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சிம்ரன் உடன் நடித்து வருகிறார்

error: Content is protected !!