News December 19, 2024

அஜித் பவார் ஒருநாள் முதல்வராவார்: பட்னாவிஸ்

image

அஜித் பவார் ஒருநாள் மகாராஷ்டிரா முதல்வராக வருவார் என அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், நிரந்தர துணை முதல்வர் என அழைக்கப்படும் அஜித் பவார், ஒருநாள் மாநிலத்தின் முதல்வராவார், அவரது உழைப்பு நிச்சயம் அதை சாத்தியப்படுத்தும் என்றார். அஜித் பவார் ஆறு முறை அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2024

WhatsApp-ல் புது AI நண்பர்.. இவரா? இவர் பெரிய ஆளாச்சே

image

Whatsapp வழியாக நண்பர்களுடன் உரையாடுவது போலவே AI பாட் உடனும் உரையாடலாம். அதான் ஏற்கெனவே இருக்கே எனக் கேட்காதீர்கள். முன்பிருப்பது MetaAI. இப்போது இணைந்திருப்பது அதை விட அட்வான்ஸ் ஆன ChatGPT. Whatsapp பயனர்கள் நேரடியாக தங்கள் சாட் ஸ்கிரீன் வழியாக உரையாடலாம். US, கனடாவில் இதற்கென பிரத்யேக எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய பயனர்கள் OpenAI பக்கத்தில் கிடைக்கிற QR Code மூலமாக இந்த சேவையை பெறலாம்.

News December 19, 2024

BREAKING: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணித்துள்ளது. ஏற்கெனவே, காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் முன்னறிவித்திருந்தது.

News December 19, 2024

₹1,500 கோடி வசூலைக் கடந்த ‘புஷ்பா 2’

image

அல்லு அர்ஜுன் நடித்து, கடந்த 5ஆம் தேதி வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹1,508 வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தி வெர்ஷனில் மட்டும் இப்படம் ₹618 கோடி வசூலித்து, பாலிவுட்டில் 2ஆவது பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ₹1,800 கோடி சாதனையை முறியடிக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News December 19, 2024

தமிழக பாஜக முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி கைது

image

கர்நாடக பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவரும், எம்.எல்.சியுமான சி.டி ரவி கைது செய்யப்பட்டார். தன்னை இழிவு செய்யும் வகையில் சட்டப்பேரவையில் மோசமான வார்த்தையை, சி.டி.ரவி பேசியதாக போலீசில் அமைச்சர் புகார் அளித்திருந்தார். சட்டமேலவை வளாகத்தில் வைத்து போலீசார், சிடி ரவியை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனா்.

News December 19, 2024

கிறிஸ்டோபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்

image

Oppenheimer, Interstellar உள்ளிட்ட கிளாசிக் படங்களை கொடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன். திரைத்துறையில் நோலனின் அளப்பரிய பங்களிப்பை கெளரவிக்கும்வகையில் பிரிட்டிஷ் மன்னர் 3-ஆம் சார்லஸ் ‘சர்’ பட்டம் கொடுத்துள்ளார். இந்த விழாவில் நோலனின் மனைவி எம்மா தாமஸுக்கு சர் பட்டத்துக்கு இணையான டேம் (சீமாட்டி) பட்டம் கொடுக்கப்பட்டது. நோலனின் பெயரிடப்படாத அடுத்த படம் 2026 ஜூலையில் வெளியாகவுள்ளது.

News December 19, 2024

நாட்டில் பரவி வரும் மர்ம நோய்.. உயிரிழக்கும் மக்கள்!

image

ஜம்மு & காஷ்மீரில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த தொற்று நோயால், 14 வயதிற்குட்பட்ட 6 குழந்தைகள் உட்பட இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பது, அச்சம் கொள்ளச் செய்கிறது. என்ன நோய்? எப்படி பரவுகிறது? என எதுவும் தெரியாமல் அதிகாரிகள் முழித்து வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மத்திய நிபுணர்கள் குழு அங்கு ஆய்வு செய்ய விரைந்துள்ளது.

News December 19, 2024

கோவா மக்களின் வீரத்தை போற்றிய PM மோடி

image

போர்த்துகீசிய ஆட்சியில் இருந்த கோவா, 1961-ம் ஆண்டு இதே நாளில் (டிச.19) தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதை நினைவுகூர்ந்த PM மோடி, “கோவாவின் சுதந்திரத்துக்காக போராடிய ஆண்கள், பெண்களின் வீரத்தையும் உறுதியையும் இந்நாளில் நினைவு கூருவோம். கோவா மக்களுக்கும் அம்மாநில வளர்ச்சிக்கும் நாம் உழைக்க இவர்களின் வீரம் ஊக்கமளிக்கட்டும்” என்று X-ல் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

News December 19, 2024

நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

image

ஜக்தீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம், அவரது (தன்கர்) பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் 14 நாட்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்ற தேவையை இத்தீர்மானம் பூர்த்தி செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

News December 19, 2024

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: 3 பேர் பலி

image

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்த விபத்தில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!