India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல நாளை முதல், டிசம்பர் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை, மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க <<-1>>இந்த<<>> இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். இதேபோல பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக யூனியன் மினிஸ்டர் சி.ஆர்.பாட்டீல் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் இன்னும் 4 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டியுள்ளதாகக் கூறினார். மேலும் இதுவரை, 11 மாநிலங்கள்/யூ.பிரதேசங்களில் 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
*நரம்பு மண்டலம் வலிமை பெறும்
*உடலுக்கு குளிர்ச்சியை தரும்
*இடுப்பு வலியை போக்கும்
*மலச்சிக்கல், வயிறு உப்புசம் நீங்கும்
*மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும்
*தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
1/4 டம்ளர் உளுந்தை குக்கரில் வேக வைத்து, ஆறிய பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பிறகு கொஞ்சம் நீர், நாட்டு சக்கரை கலந்து கொதிக்கவிட்ட பிறகு, பால் அல்லது தேங்காய் பால் கலந்தால் சுவையான உளுந்து பால் ரெடி.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு-ஆளுநர் இடையிலான மோதல் போக்கு நீடிப்பது தேவையற்ற ஒன்று என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு TN அரசுக்கு யோசனை தெரிவித்த அவர், அதன்மூலம் உடனடியாக ஒரு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கவாஸாகி நிஞ்சா 1100SX மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய 1099 CC, 4 சிலிண்டர் எஞ்சின் மூலம் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் டெலிவரி தொடங்கும் நிலையில், Ex-Showroom விலையாக ₹13.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைக் ரைடர்களுக்கு அனைத்து விதத்திலும் ஈடுகொடுக்கும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
*கீரை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக்கும்.
*அன்னாசி: சிறுநீரக நோய்களை தடுக்க்கும்.
*குடைமிளகாய்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
*காலிபிளவர்: சிறுநீரகத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
*பூண்டு: குறைந்தளவு சோடியம் உள்ளதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலகிலும் களைகட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், சாண்டா வேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 8 நாள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ISS சென்ற அவர், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 6 மாதங்களாக அங்கேயே தங்கியுள்ளார். மேலும், 2025 ஏப்ரலுக்கு அவர் பூமிக்கு திரும்புவார் என NASA கூறியுள்ளது.
▶டிசம்பர்20 (மார்கழி 5) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 – 10:15 AM, 04:45 – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 – 01:15 AM, 06:30 – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM-12:00 PM ▶எமகண்டம்: 03:00 – 04:30 PM ▶குளிகை: 07:30-09:00 AM ▶திதி: 1:55 PM வரை பஞ்சமி பின்பு சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: மகம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் இணைச் செயலாளர் பாபா தெரிவித்துள்ளார். அதேபோல, CSK அகாடமியில், அஸ்வின் பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக CSK CEO காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும், CSK அகாடமியை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.