India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு பெறச் செய்யும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். தற்போது ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. அதனை 58ஆக குறைக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் மத்திய அரசு அதனை மறுத்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாதம் ₹3,000 தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர்கள் (10ஆம் வகுப்பு தேர்ச்சி / ஃபெயிலானவர்கள்) நியமிக்கப்பட உள்ளனர். 12 மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிப்போருக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மாற்றி மாற்றி யூ-டர்ன் அடித்து வருகிறது. நேற்று ஆந்திராவை நோக்கி சென்ற அது, அடுத்த இரு தினங்களுக்கு வலுப்பெற்று மீண்டும் தமிழகம் நோக்கி வரும் என்றும் 24ஆம் தேதி டெல்டா பகுதிகளில் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் 23ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை டெல்லியில் கூடவுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, அம்பேத்கர் தொடர்பாக அமித் ஷா பேசியது, அதானி விவகாரம் ஆகியவற்றால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தினமும் முடங்கி வருகின்றன. இதனை சீர் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
அதிகாலையில் தியானம் செய்வது நாள் முழுக்க அமைதியான, சீரான மனநிலையை அளிக்கிறது * மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது * காலை நேரம் அமைதியானது என்பதால், நமது எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு மனது திறம்பட செயல்பட உதவுகிறது * எடுத்து கொள்ளும் வேலையில் கவனச்சிதறல்களைத் தவிர்க்க உதவுகிறது * தினமும் அதிகாலை தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கதையும் மேம்படுத்த உதவுகிறது.
ஜிம்மில் சீமானுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை யூடியூபர் ‘சாட்டை’ துரைமுருகன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், சீமானின் சட்டையில் ‘Born to Win’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்து குஷியான ‘நாம் தமிழர்’ தம்பிகள், “வெல்லப் பிறந்தவர் எங்கள் அண்ணன்” என்று கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், “வென்றுவிட்டு பேசுங்கள்” என்று எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்திய அணியின் ரிச்சா கோஷ்(21) WT20I போட்டிகளில் அதிகவேகமாக அரைசதம் அடித்தவர் என்ற நியூசி. சோஃபி டெவின், ஆஸி. ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார். மே.இ. தீவுகளுக்கு எதிரான போட்டியில் 54(21) ரன்களை அடித்து, அதிகவேக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்மிருதி மந்தனா (24) அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
UGC-NET தேர்வு தொடர்பான அறிவிப்பு தமிழக மாணவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான UGC-NET தேர்வு ஜனவரி 15, 16ஆம் தேதி 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. அந்த 2 நாள்களும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கனமழை காரணமாக 6 – 12ஆம் வகுப்பு வரை தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, நாளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில், எந்தெந்த மாவட்டங்களில் மழையால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதோ, அங்கெல்லாம் நாளை தேர்வு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த, மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல நாளை முதல், டிசம்பர் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.