News November 9, 2024

மின்நுகர்வோர் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள் (2/2)

image

<<14567813>>* நெல்லை, <<>>தூத்துக்குடி, குமரி – 89033 31912 * காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் – 9444371912 * மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை – 94431 11912 * திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கரூர் – 94861 11912. இந்தத் தகவல் உங்களுக்கு பயனளித்திருக்கும். இதை உங்களுக்கு தெரிந்த மற்றவர்களுக்கும் அனுப்பி அவர்களுக்கும் உதவுங்கள்.

News November 9, 2024

மின்நுகர்வோர் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள் (1/2)

image

மின்நுகர்வோர் புகார் தெரிவிக்க மின்சார வாரியம் புதிய வசதி செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் மண்டல வாரியாக வாட்ஸ் அப் எண்கள் அறிவித்துள்ளது. அந்த எண்களை தெரிந்து கொள்ளலாம் * விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை- 94458 55768 * சேலம், ஈரோடு, நாமக்கல் – 94458 51912 * சென்னை – 94458 50829 * கோவை, திருப்பூர், நீலகிரி – 94421 11912

News November 9, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14567072>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ஜெரிக்கோ (ஜோர்டான்) 2) De-Notified Tribes 3) லீலா சேத் 4) Crescograph 5) கனியியல் (பழங்கள் பற்றிய படிப்பு) 6) நீலம் 7) அறைகலன் 8) தேனீ 9) Na. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News November 9, 2024

உயர்கல்வி டிப்ஸ் வழங்க ‘Help Desk’

image

உயர்கல்வி தொடர்பான தகவல்களை வழங்கக் கல்வி நிறுவனங்களில் உதவி மையம்(Help Desk) அமைக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “இந்த உதவி மையம் மூலம் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட தகவல்களை User Friendly முறையில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2024

சூர்யா சொன்ன அந்த வார்த்தை.. பகிர்ந்த சஞ்சு

image

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின் பேசிய சஞ்சு சாம்சன், ‘துலீப் கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சூர்யா என்னிடம் வந்து, ’அடுத்த 7 போட்டிகளில் நீ தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ன நடந்தாலும் சரி பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள் தான் நான் சிறப்பாக விளையாட உதவியது’ என்றார்.

News November 9, 2024

ஆங்கிலம் அறிவோம்: Chest Thumping என்றால் என்ன?

image

Chest Thumping என்பதற்கும், ஒப்பாரி வைப்பவர்களுக்கும் தொடர்பில்லை. நெஞ்சு வலி போன்ற சாவின் விளிம்பில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் முதல் உதவியாகவும் இதை நினைத்துவிடாதீர்கள். அப்படியானால் Chest Thumping என்றால் என்ன? Chest Thumping என்ற சொல் தற்பெருமை அடித்துக்கொள்வதை குறிக்கின்றது. இதற்கு சமமான சொற்களாக Bragging, Boasting (தற்பெருமை, வீண் பெருமை பேசுதல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

News November 9, 2024

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி

image

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அங்கு நேற்று நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுவதாகவும், இதன் காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் கூறியுள்ளது. இது 2 நாள்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதியை நோக்கி நகரும் எனவும் கணித்துள்ளது.

News November 9, 2024

BCCI புதிய முடிவு?

image

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விரைவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதில் தோல்வியடைந்தால், பயிற்சியாளர் பதவியை பகிர்ந்தளிக்க BCCI முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட்டுக்கு தனித்தனி பயிற்சியாளரை நியமிக்க BCCI முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை தனித்தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2024

RAIN ALERT: 7 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 7 நாள்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, 11ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. SHARE IT.

News November 9, 2024

கோலாகலமாக தொடங்கிய ராஜராஜ சோழன் சதய விழா

image

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா இன்று காலை 8.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான இன்று கருத்தரங்கம், 1,039 பேர் பங்கேற்கும் பரத நாட்டியம், பட்டிமன்றம், ‘சதய நாயகன் ராஜராஜன்’ வரலாற்று நாடகம் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் நடைபெறும்.

error: Content is protected !!