India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக நீரிழிவு தினத்தையொட்டி, தமிழக மக்களுக்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “சர்க்கரை நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுப்பதுடன் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இந்தப் பிரச்னையை தவிர்க்கலாம். எனவே, இன்றைய தினம் அனைவரும் தங்களது கண்களை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான (17ஆவது) வாக்குப்பதிவு இன்று 7 AMக்கு தொடங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், அதிபர் தேர்தலில் வென்ற கட்சிகளே இந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால், திசநாயக கட்சி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் ஆட்சியின்போது USAவில் தங்க பிடிக்காதவர்களுக்கு, சொகுசு கப்பல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்லி வீ ரெசிடென்சஸ் நிறுவனத்தின் இந்த சுற்றுலா பேக்கேஜ் 1-4 Yrs என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் $1.59 லட்சம் (SHARING), $2.59 லட்சம் (PRIVATE ROOM). அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் நாட்டை விட்டு வெளியேறுவோம் எனக் கூறியவர்களுக்காக, இந்த சுற்றுலா என கப்பல் நிறுவனம் கூறியுள்ளது.
தலைமுடி கிடுகிடுவென வளர்வதற்கு நிபுணர்கள் தரும் தயிர் டிப்ஸ்…
*புளித்த தயிரை தேவையான அளவு எடுத்து அதனை தலை முடியில் அப்ளை செய்யவும்.
*சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்தப் பிறகு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்.
*வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதுபோன்று செய்வதன்மூலம் பொடுகு, எரிச்சலை தடுக்கலாம்.
*தயிரில் இருக்கும் புரதங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
நேரம் காலம் பார்க்காமல் ஊழியர்கள் சிலர் வேலை செய்வதை நாம் கண்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர், அலுவலக பணியை முடித்துவிட்டு லேட்டாக கிளம்புவதால், நாளை லேட்டாகத்தான் வருவேன் என மேலதிகாரிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். மனம் நொந்தவாறு அந்த அதிகாரி இதனை சோஷியல் மீடியாவில் பகிர, ஊழியருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க? Cmt Here.
*மனிதன் ஒரு அடி நடக்க 200 தசைகள் தேவை.
*மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20% மூளைக்குச் செல்கிறது.
*மனித உடல் எடை 14% எலும்புகளால் ஆனது.
*மனித உடலில் 25 வாட் மின்சாரம் உள்ளது.
*மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
*மனித உடலில் 72 மீட்டர் நரம்புகள் உள்ளன.
*மனித நாக்கில் 3000 சுவையறியும் Cells உண்டு.
*மனித மூளையில் 6 கிராம் தாமிரம் உள்ளது.
*மனித இதயம் 1.03 லட்சம்/Day முறை துடிக்கிறது.
5 PMக்கு மேல், பெண்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உள்ளதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சி நன்றாக இருப்பது போன்ற பிம்பத்தை திமுக ஏற்படுத்துகிறது என்றார். மேலும், புதிதாக கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026இல் தெரியவரும் எனவும் அவர் விஜய் கட்சி குறித்து மறைமுகமாக தெரிவித்துள்ளார். சசிகலா கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க? Cmt Here.
பக்கத்து வீட்டுக்காரரை போலீஸில் சிக்க வைக்க, பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது. நவுராங்கியா பகுதியைச் சேர்ந்த ஜெய்நாராயணனுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில், 16 வயதுடைய கடைசி மகள், சில நாள்களுக்குமுன் கொல்லப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்னை இருந்ததால், அவரை சிக்க வைக்க இந்த கோர செயலில் ஜெய்நாராயணன் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறல் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: இனியவைகூறல்
▶குறள் எண்: 98
▶குறள்: சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
▶விளக்க உரை: சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
காவிரி நீரை தென்மாநிலங்கள் சிக்கனமாக செலவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது. இந்தக் குழுவின் 107வது கூட்டம் டெல்லியில் நடந்தபோது, தமிழகத்திற்கு 13.78 TMC (நவம்பர் மாதம்) நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், மாதந்தோறும் நீர் கிடைப்பதில் மாறுபாடு ஏற்படும் என்பதால் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் நீரை சிக்கனமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.