News November 14, 2024

கலக்கத்தில் அரசியல் கட்சிகள்

image

வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்திருப்பது கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் 73.2%, 2019இல் 80.33%, 2024 பொதுத்தேர்தலில் 72.92% வாக்குகள் பதிவானது. ஆனால், இடைத்தேர்தலில் 64.72% வாக்குகளே பதிவாகியுள்ளன. இதனால், வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிரியங்காவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்., பணியாற்றியது.

News November 14, 2024

IOCL புதிய தலைவராக சாஹ்னி நியமனம்

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவராக அரவிந்தர் சிங் சாஹ்னி (54) நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சாஹ்னி IOCL நிறுவனத்தின் வணிக வளர்ச்சி & பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

News November 14, 2024

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்

image

சென்னை கிண்டி அரசு ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7,900 ஹாஸ்பிடல்கள், 45,000 டாக்டர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.

News November 14, 2024

நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு TAG கட்டாயம்

image

சென்னை கிண்டி அரசு ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, உள்நோயாளிகளுடன் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜிவ் காந்தி உள்பட பல அரசு ஹாஸ்பிடல்களில் TAG முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்நோயாளிகளுடன் வருபவர்களுக்கு TAG அணிவிக்கப்படுகிறது. இந்த TAG இருந்தால் மட்டுமே ஹாஸ்பிடல் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

News November 14, 2024

கிரகங்கள் தரும் நன்மைகள்

image

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. நமது ஜாதகத்தில் எது வலிமை பெற்று யோகம் தருகிறது என்பதை அறிய வேண்டும். ➤சூரியன்: தலைமைப் பதவி ➤சந்திரன்: புகழ் ➤அங்காரகன்: வீரம் ➤புதன்: அறிவாற்றல் ➤வியாழன்: நன்மதிப்பு ➤சுக்கிரன்: அழகாற்றல் & அந்தஸ்து ➤சனி: மனப்பக்குவம் ➤ராகு: பகைவர் பயம் நீங்குதல் ➤கேது: குல அபிவிருத்தி.

News November 14, 2024

ஓரணியில் திரளுமா திமுக எதிர்ப்பு சக்திகள்?

image

DMK கூட்டணிக்கு எதிராக வலுவான ‘மெகா கூட்டணி’ அமைக்க தமாகா தலைவர் GK வாசன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக BJPன் அனுமதி பெற்று, அதிமுக, தவெக, பாமக, தேமுதிக தலைவர்களை சந்திக்க உள்ளாராம். மக்களவைத் தேர்தலின் போதே, ADMK, BJP கூட்டணியை உருவாக்க வாசன் முயற்சித்தார். EPS பிடிவாதத்தால் கூட்டணி அமையவில்லை. இந்நிலையில், DMK எதிர்ப்பு சக்திகளை ஓர் குடையின் கீழ் கொண்டு வர தீவிரம் காட்டுகிறாராம்.

News November 14, 2024

BREAKING: டாஸ்மாக்கில் இன்று முதல் வரும் மாற்றம்

image

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டமாக இந்த புதிய முறை அமல்படுத்தப்படவுள்ளது. மது பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

News November 14, 2024

மொபைலுடன் பாத்ரூம் போகும் பழக்கம் உள்ளவரா…

image

பலருக்கும் பாத்ரூமில் மொபைலை பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. போன் கையில் இருந்தால், அரைமணி வரை அங்கேயே செலவிடுகிறார்கள். அப்படி இருப்பவர்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்திருப்பது இடுப்புப் பகுதியில் அழுத்தத்தை உண்டாக்குமாம். இது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது எனவும் இது Pelvic சதைகளை வலுவிழக்கச் செய்யும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

News November 14, 2024

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

image

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலத்தின் முதல் நாளில் இருந்தே 18 மணி நேரம் கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைன் முறையில் தினசரி 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் முறையில் தினசரி 10,000 பேர் வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தேதி & நேரம் வாரியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News November 14, 2024

கைமாறுகிறதா மணப்புரம் ஃபைனான்ஸ்?

image

மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற அமெரிக்க நிறுவனமான BainCapital திட்டமிட்டுள்ளது. மணப்புரம் நிறுவனம் நகைக்கடன் வழங்குவதை தொழிலாகக் கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் அதிக வட்டிக்கு கடன்கள் வழங்கியதால் புதிய கடன்கள் வழங்க RBI தடை விதித்தது. இதனால் மணப்புரம் பங்குகளின் விலை சரியும் சூழலில், மெஜாரிட்டி பங்குகளை கைப்பற்ற BainCapital பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

error: Content is protected !!