News November 14, 2024

டிஜிட்டல் மது விற்பனை: நாளை தள்ளிவைப்பு

image

டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்வது நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் TASMACல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இருப்பில் உள்ள பழைய மதுபானங்களை இன்று விற்பனை செய்த பிறகு நாளை முதல் டிஜிட்டல் முறையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ₹10 பணம் வசூலிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

News November 14, 2024

BREAKING: வைகோவுக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை

image

வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News November 14, 2024

இளைஞர்களை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்

image

உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி லான்சேட்’ இதழ் நடத்திய ஆய்வில், உலகளவில் 80 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது 1990இல் 20 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 7%இல் இருந்து 14%ஆக அதிகரித்துள்ளது.

News November 14, 2024

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் ரூபியோ

image

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை நியமித்து வருகிறார். புளோரிடா மாகாணத்தின் செனட் உறுப்பினரான மார்கோ ரூபியோவை டிரம்ப் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளார். ரூபியோ சீனாவை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் ரூபியோவை “அச்சமற்ற போர்வீரன்” என புகழ்ந்துள்ளார்.

News November 14, 2024

தங்கம் விலை ₹880 குறைவு

image

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ₹880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 விலை குறைந்து ₹55,480க்கும், கிராமுக்கு ₹110 குறைந்து ₹6,935க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ₹4,160 சரிந்துள்ளது.

News November 14, 2024

ஆதவ் அர்ஜுனா குறித்து விசிக நிர்வாகிகள் குமுறல்

image

ஆதவ் அர்ஜுனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை விசிக 2ஆம் கட்டத் தலைவர்கள் திருமாவிடம் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. DMK கூட்டணியில் இருந்து VCK வெளியேறி, அதிமுக (அ) தவெகவுடன் பயணிக்க உள்ளதாகப் பேசப்படுகிறது. இதற்கு அச்சாரமிடுவது போல, ஆதவ் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் இதே நிலை தொடர்ந்தால், கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவிடம் குமுறியுள்ளனர்.

News November 14, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சர் உத்தரவு

image

பெயர் கெட்டுவிடும் என பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களை மூடி மறைக்கும் செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், 1417, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் மாணவர்கள் அச்சமில்லாமல் புகார் அளிக்கலாம். பள்ளியில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதாக இருந்தால், பெற்றோர் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 14, 2024

முக்கிய வங்கிகள் பட்டியல்: RBI அறிவிப்பு

image

உள்நாட்டு வங்கித்துறை கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான RBI பட்டியலில், SBI, HDFC, ICICI வங்கிகள் இடம்பெற்றுள்ளன. எந்த வங்கிகளின் நஷ்டம் (அ) நிதி நெருக்கடியால், நிதி நிர்வாக கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலோ, பாதிப்போ ஏற்படக்கூடுமோ, அந்த வங்கிகளை 2014 முதல் ஆண்டுதோறும் RBI வரிசைப்படுத்துகிறது. அப்போது முதல் இந்த 3 வங்கிகளும் தொடர்ந்து இந்த பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.

News November 14, 2024

2100ல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு?

image

உலகின் மக்கள் தொகை தற்போது 800 கோடியை கடந்து விட்டது. இந்த எண்ணிக்கை 2100-க்குள் 1000 கோடியை கடந்து விடும் என்கிறது UN Population Division. 2100ல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏற்ற இறக்கம் கண்டு இந்தியா 153.3 கோடி மக்கள் தொகையுடன் நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சீனா (77.1 கோடி), நைஜீரியா (54.6 கோடி), பாகிஸ்தான் (48.7 கோடி) இருக்கும் என்றும் கணித்துள்ளது.

News November 14, 2024

Tech Talk: காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி

image

பிறவியிலேயே அல்லது வயது உள்ளிட்ட காரணங்களால் காது கேட்காதவர்களுக்கு உதவும் வகையிலான கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது. ஐஃபோன் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் இந்த மூக்குக் கண்ணாடியில், எதிரில் உள்ளவர் பேசும் போது அவருடைய குரல் போனில் பதிவாகி, AI தொழில்நுட்பம் மூலமாக அது எழுத்தாக மாற்றப்படும். நியூயார்க் கோர்னெல் பல்கலை. மாணவர் நரங் வடிவமைத்த இது விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது.

error: Content is protected !!