News November 14, 2024

கல்வி கடனுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு…

image

நல்ல மதிப்பெண்கள் பெற்றும், உரிய நேரத்தில் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வழி தெரியாமல் தவிப்பவர்களுக்காகவே ‘வித்யாலட்சுமி திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பிணை உத்தரவாதம் இல்லாமல், வட்டி மானியத்துடன் கல்விக் கடன் கொடுக்கப்படும். குடும்ப வருவாய் ₹8 லட்சம் வரை உள்ளோருக்கு, இத்திட்டத்தில் கடன் (₹7.5 லட்சம்) கிடைக்கும். மனு செய்வது முதற்கொண்டு அனைத்துமே ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம்.

News November 14, 2024

மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி மரணம்

image

ஆம்பூரில் மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசு ஹாஸ்பிட்டலில் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணி துர்காதேவியை தருமபுரி, சேலம் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகாக அலைக்கழித்ததால், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

News November 14, 2024

திருப்பதி கோயில் செல்வோருக்கு குட் நியூஸ்

image

திருப்பதி வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால், ரூ.500 கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை, ஸ்ரீவாணி தரிசனம் எனக் கூறப்படுகிறது. திருமலையில் கோகுலம் கான்பரன்ஸ் அறைக்கு பின்னால் புதிய கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நாளொன்றுக்கு 900 உடனடி டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பகிருங்க.

News November 14, 2024

அரசு ஊழியர் இறந்தால் மகனுக்கு வேலையா? SC மறுப்பு

image

அரசு ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்கும்படி உத்தரவிட முடியாதென SC மறுத்துவிட்டது. ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர், போலீசான தனது தந்தை இறந்து விட்டதால், தனக்கு வேலை அளிக்கும்படி உத்தரவிடக்கோரி வழக்குத் தாெடுத்தார். இதை விசாரித்த SC, குடும்ப நிதிநிலையை கவனத்தில் கொண்டு இரக்கப்பட்டே வேலை வழங்கப்படுகிறது. இது வகுக்கப்பட்ட உரிமை அல்ல என்று கோரிக்கையை நிராகரித்தது.

News November 14, 2024

தங்கம் விலை குறைய என்ன காரணம்?

image

உலகளவில் தங்கம் முதலீட்டிற்கான வழியாக பார்க்கப்படுகிறது. போர் பதற்றம், பொருளாதார சூழல் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவித்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, டாலரின் மதிப்பு உயர்ந்ததோடு, பங்குச்சந்தையும் வலுவானது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால், அதன் விலை சரியத் தொடங்கியுள்ளது.

News November 14, 2024

இன்று ஒரே நாளில் வெள்ளி விலை ₹2,000 குறைவு

image

ஆபரணத் தங்கத்தை போன்று, வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ₹2 குறைந்து ₹99க்கும், கிலோ வெள்ளி ₹2,000 குறைந்து ₹99,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவிற்கு ₹6,000 குறைந்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News November 14, 2024

நடிகை கஸ்தூரி விரைவில் கைது?

image

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, போலீசாரின் சம்மனை பெற மறுத்து அவர் தலைமறைவாக உள்ள நிலையில், முன்ஜாமின் மனுவும் தள்ளுபடியானதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

இந்திய அணிக்கான பேட்டிங் ஆலோசகர் சச்சின்?

image

பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கான பேட்டிங் ஆலோசகராக சச்சின் வர வேண்டுமென WV ராமன் விருப்பம் தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா முழுமையாக இழந்தது. தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடவுள்ளது. இந்நிலையில், சச்சினின் ஆலோசனையால் இந்திய அணி பயனடையலாம் என அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News November 14, 2024

நேரு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ்தளப்பதிவில், நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். நேருவின் 3 முறை தொடர் பிரதமர் பதவி வெற்றியை மோடி சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2024

ஹாஸ்பிட்டல் வருவோருக்கு கையில் டேக்

image

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரின் கைகளில் 4 நிறங்களில்
டேக் கட்டப்படும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, * தீவிர சிகிச்சை பிரிவு – சிறப்பு நிறம், * சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு – மஞ்சள் நிறம், * சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு – பச்சை நிறம், * பொது மருத்துவம் – நீல நிறம் டேக் கட்டப்படும் என அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!