India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*இடைக்கால தடை உத்தரவு (Interim) – மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளை. *செயலுறுத்து தடை உத்தரவு (Mandatory) – ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இடும் கட்டளை. *நிலைக்கால தடை உத்தரவு (Perpetual) – ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என நிரந்தரத் தடை பெறுவதாகும். *தடை உறுத்துக்கட்டளை (Prohibitory) – ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் இடும் கட்டளை.
ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ₹55,560க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,945க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் ₹99க்கும், கிலோ ₹99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டிம் சவுதி அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது சொந்த ஊரில் நடைபெறும் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில், நியூசி. அணி WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அப்போட்டியில் விளையாடுவேன் என்றும் கூறினார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 104 போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளை சவுதி வீழ்த்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கும் கதையில் கிளாடியேட்டராக இருக்கும் நாயகன் லூசியஸ், ஜெனரல் மார்கஸை எப்படி பழிவாங்கினார் என்பதே கதை. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்கின்றன.பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன் நடிப்பில் அசத்தியுள்ளனர். முதல் பாகத்தின் ஆஸ்கார் திரைக்கதைக்கு இப்படம் ஈடில்லை. குறைகள் இருந்தாலும், Visual Spectale -ஆன படம் ரசிக்கவேண்டியதே.
சென்னையில் ஒரே நாளில் மூதாட்டி, இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். நீலாங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட ராஜி(60) என்ற முதியவர் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டுள்ளார். ராமாபுரத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை ஹெச்.ஆர்., ஒருவர் வன்கொடுமை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும், தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா எனக் கேள்வி எழுகிறது.
IDBI வங்கியில் காலியாக உள்ள 1,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.16) கடைசி நாளாகும். Executive Sales and Operation நிலையிலான பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Any UG Degree. வயது: 20-25. சம்பளம்: 1 Yr ₹29,000, 2 Yr ₹31,000. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல். விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இந்த <
ஏர் டாக்ஸி தயாரிக்கும் நிறுவனமான இ-பிளேன், ₹115 கோடி முதலீடு திரட்டியுள்ளது. சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் சிறிய ரக விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நகரங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்தை வழங்கும் வகையில், சென்னை ஐஐடி உதவியுடன் இந்த ஏர் டாக்ஸி தயாராகி வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த டாக்ஸியில் 200 கி.மீ. வரை பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.
1) உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம் எங்குள்ளது? 2) BCE என்பதன் விரிவாக்கம் என்ன? 3)கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிய உதவும் கருவி எது? 4) அண்ணா பல்கலைக்கழகம் எந்தாண்டு நிறுவப்பட்டது? 5)சோழர்களின் குடவோலை முறையை பற்றி பேசும் கல்வெட்டு எது? 6) எந்த மரத்தில் ஹாக்கி மட்டைகள் செய்யப்படுகிறது? 7) பஞ்சவர்ணக் கிளியின் அறிவியல் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு சுமார் ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கங்குவா படம் கலவையான விமர்சனத்தைப் பெற முக்கிய காரணமாக உள்ளது படத்தின் BGM ஸ்கோர். ஒரு சில இடங்களில் DSP மிரட்டினாலும், பல இடங்களில் BGM இரைச்சலாக, சத்தமாக இருப்பதாகவே இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் முன்கூட்டியே விழித்து கொண்டது புஷ்பா படக்குழு எனலாம். புஷ்பாவிற்கு DSP தான் இசை என்றாலும், BGM அமைக்க தமன் கமிட்டாகியுள்ளார் எனச் செய்திகள் வெளிவருகின்றன.
Sorry, no posts matched your criteria.