News November 19, 2024

டெல்லியில் நாளை முதல் ஆன்லைனில் 10, 12ம் வகுப்பு

image

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து இருப்பதால், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் 10, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக நடந்த வகுப்புகள் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக நாளை முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி CM அதிஷி அறிவித்துள்ளார். மற்ற வகுப்புகள் ஏற்கெனவே ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

News November 19, 2024

3-ஆம் உலகப் போரை தூண்டும் பைடன்

image

உக்ரைனை வைத்து ரஷ்யாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்து வருகிறது. பைடனின் பதவிக்காலம் 2 மாதங்களில் முடிய போகிறது. அடுத்து அதிபராக போகும் டிரம்ப்புக்கு இந்த போரில் ஆர்வமில்லை. அதனால், இப்போதே ஏதாவது செய்துவிட நினைக்கும் பைடன், நீண்டதூர ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்க உக்ரைனுக்கு அனுமதி கொடுத்துள்ளார். இது 3-ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.

News November 18, 2024

நள்ளிரவு வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

News November 18, 2024

GOOGLE MAP பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

GOOGLE MAP பயன்படுத்தி சபரிமலையில் இருந்து கர்நாடகா செல்ல முயன்ற பக்தர் ஒருவர் திண்டுக்கல்லில் ஆற்றுக்குள் சிக்கி சகதியில் 5 மணி நேரம் தவித்துள்ளார். அவரை போலீஸ் மீட்டது. GOOGLE MAP பயன்படுத்துகையில் குறிப்பிட்ட தூரத்திலேயே உண்மையான பாதையா என்பது தெரிந்து விடும். அதை அறியாமல் சென்றால் இதுபோல்தான் பிரச்னை வரும். அதனால் GOOGLE MAPஐ பயன்படுத்தும்போது விழிப்போடு இருப்பது நல்லது. SHARE IT

News November 18, 2024

‘ஆன்டிபயாட்டிக்’ அதிகம் எடுத்தால் ஆபத்து: WHO

image

சாதாரண காய்ச்சல், இருமலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டுமென WHO விஞ்ஞானி செளமியா சாமிநாதன் கேட்டுக்கொண்டார். இந்திய மக்கள் அதிகளவு ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதாகக் கவலை தெரிவித்த அவர், மருத்துவர்கள் ஆலோசனையின்றி அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். நாளென்றுக்கு 10 Paracetamol மாத்திரை எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் செயலிழக்கும் என்றும் எச்சரித்தார்.

News November 18, 2024

யானை தாக்கியதற்கு இதுவே காரணம்

image

திருச்செந்தூர் <<14644418>>கோயில் யானை<<>> மிதித்து பாகனும், அவரது உறவினரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வனசரக அலுவலர் கூறும்போது, பாகனின் உறவினர் சிசுபாலன் யானை தெய்வானை அருகே நீண்ட நேரம் செல்ஃபி எடுத்ததால், ஆக்ரோஷமடைந்த யானை கால், தும்பிக்கையால் அவரை தாக்கியுள்ளது. அப்போது, உறவினரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் தாக்கியதாக தெரிவித்தார். பெண் யானை என்பதால் மதம் பிடிக்க வாய்ப்பில்லை என்றும் விளக்கமளித்தார்.

News November 18, 2024

விஜய்- அண்ணாமலை சந்திப்பு?

image

அண்ணாமலை, விஜய் சந்தித்ததாக தகவல் பரவி வருகிறது. தவெக மாநாட்டில் பேசிய விஜய், திமுகவை சாடி பேசினார். பாஜகவை முடிந்த வரை விமர்சிப்பதை தவிர்த்தார். இதேபோல், விஜய்யை விமர்சிக்கக் கூடாதென பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் லண்டனில் அண்ணாமலையும், விஜய்யும் நேரில் சந்தித்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை பாஜக, தவெக நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

News November 18, 2024

தூங்கும்போது உள்ளாடைகள் அணியலாமா?

image

தூங்கும் போது நீங்கள் அணியும் உள்ளாடை, உங்கள் தூக்கத்தை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் சருமத்தின் சுவாசித்தல் & வெப்பப் பராமரிப்பு பாதிக்கப்படும். இதனால் அரிப்பு ஏற்படும். ஈரப்பதமும், வெப்பமும் அதிகரிக்கலாம். இது நிம்மதியான தூக்கத்தையும் பாதிக்கும். தூங்கும்போது உள்ளாடைகளை தவிர்க்கலாம் அல்லது தளர்வான பருத்தி உள்ளாடைகள் அணியலாம்.

News November 18, 2024

வங்கிகளில் கடன் வாங்கி பைக் வாங்க திட்டமா? இதை படிங்க

image

வங்கிக் கடன் வாங்கி சிலர் பைக் வாங்குவது குறித்து ஆலோசித்து வருவார்கள். அவர்களுக்காகவே இந்த செய்தி. வங்கிகள் பைக் லோனுக்கு 3 ஆண்டுகால வரம்பில் ரூ.1 லட்சம் லோன் அளித்தால் வசூலிக்கும் வட்டியை தெரிந்து கொள்ளலாம். *IDBI – 8.85% * இந்தியன் வங்கி – 10.15% * IOB – 11.00% *SBI- 13.30% * கனரா – 11.40% * சென்டிரல் வங்கி – 11.35% *HDFC – 14.50% * AXIS – 16.00% * யூனியன் வங்கி – 12.35% ஆகும்.

News November 18, 2024

உள்ளாடை இன்றி தூங்கினால் இவ்வளவு நன்மைகளா!

image

உள்ளாடை அணியாமல் (அ) தளர்வான பருத்தி உள்ளாடைகள் அணிந்து உறங்குவதால்: *சருமத்தின் காற்றோட்டம் அதிகரிக்கும் *ஆண்களின் விந்து ஆரோக்கியம் மேம்படும் *அந்தரங்க உறுப்புகளில் தேவையற்ற ஈரப்பதம் வருவது தடுக்கப்படும் *பாக்டீரியா, ஈஸ்ட் வளர்ச்சியை தடுக்கும் *ஆண்களின் விரைப்பை வெப்பநிலை சீராக பராமரிக்கப்படும் *பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் ஆபத்து குறையும்.

error: Content is protected !!