India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், போட்டியின்போது விராட் கோலியை சீண்ட வேண்டாம் என ஆஸி. வீரர்களை ஷேன் வாட்சன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “கோலியை சீண்டினால் அவரது சிறப்பான ஆட்டம் வெளியே வந்துவிடும். சீண்டியதற்கான தக்க விலையை ஆஸி., வீரர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே கோலியை கண்டுகொள்ளாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), இறந்ததற்கு <<14643248>>சிக்கன் ரைஸ்<<>> காரணமல்ல என போலீசார் தெரிவித்துள்ளனர். ம.பி.க்கு போட்டிக்கு சென்ற அவருக்கு, விளையாட்டின் போது வயிற்று, மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனை அறியாத அவர், வயிற்றில் வலி ஏற்பட்டதால், உடல் உபாதைப் பிரச்னை எனக்கருதி சென்னை திரும்பியதும் சிகிச்சை மேற்கொண்டதால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்ததாகவும் கூறினர்.
2026 தேர்தல் அதிமுகவினருக்கு வாழ்வா, சாவா போன்றது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறாவிட்டால் அரசியல் களம் மாறும் என்றும், சிறிய கட்சிகள் மேலே வரும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசி வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், <<14652242>>அதிமுகவின் இன்றைய நிலை<<>> குறித்து தங்களது ஆதங்கத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இண்டர்நெட்டில் தேட நம் முதல் சாய்ஸ், கூகுள். அந்த கூகுள் Chrome பிரவுசரில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே 89% பேர் Chrome தான் பயன்படுத்துகின்றனர். இதை உத்தியாக கொண்டு, internet search market, AI development-ல் கூகுள் பெரும் வருமானம் ஈட்டுவதாகவும், இந்த ஏகபோகத்தை தடுக்க Chrome-ஐ விற்க, தாய் நிறுவனம் Alphabet-ஐ நிர்பந்திக்க அமெரிக்க நீதித்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்புகாரை கூகுள் மறுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாதகவை சேர்ந்த பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அனைவரும் ஒரு சேர சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், நாதகவில் இருந்து விலகிய மா.செக்கள், தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அவர்கள் தவெகவில் இணைந்தால், சீமானுக்கு அது கடும் பின்னடைவாக அமையும்.
அதிமுக கூட்டணியில் சேருவதற்கு 20 சீட் + ₹100 கோடியை கட்சிகள் கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேசி நிர்வாகிகள் கெடுத்துவிட வேண்டாம் எனவும், கூட்டணியை இபிஎஸ் பார்த்துக் கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் இருப்பதாகவும், அதை முதலில் சரிசெய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
DC-யில் இருந்து பண்ட் வெளியேறியதற்கு சம்பளப் பிரச்னைதான் காரணம் என கவாஸ்கர் கூறியிருந்தார். ஆனால், நிச்சயமாக பணத்திற்காக வெளியேறவில்லை என பண்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அணி நிர்வாகத்துடன் அவருக்கு இருக்கும் கருத்து வேறுபாடு உறுதியாகி உள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் கூறுகின்றனர். DC-யின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியை நியமித்ததில் பண்ட்-க்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். காற்று மாசை குறைப்பதற்காக செயற்கை மழைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அனுமதி அளிக்காத பட்சத்தில் PM மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்திற்கு ம.பி. பாஜக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வெளியான இப்படம், திட்டமிட்ட அரசியல் பிரசாரப் படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டியிருந்தார்.
நவ.26 முதல் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 2023இல் ஸ்டிரைக் செய்தபோது அமைச்சர்கள் பேச்சு நடத்தி, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.