News November 19, 2024

வறுமையை விரட்டச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

image

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பெண் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராசாத்தி, வறுமை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றிருந்தார். அதன்பின் சொந்த ஊர் திரும்பாத நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாயகம் திரும்பிய அவர் குடும்பத்தினரை சந்திக்கும் முன்பே மரணித்தார்.

News November 19, 2024

கூடைப்பந்து வீரர்களுக்கு மாதந்தோறும் ₹70,000 ஊதியம்

image

கிரிக்கெட்டைப்போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ₹70,000 ஊதியம் வழங்கப்படும் என இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் பாணியில் விரைவில் கூடைப்பந்திற்கும் லீக் போட்டி நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், சென்னையில் முதல் முறையாக வரும் 22, 25ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News November 19, 2024

₹601-க்கு ஆண்டுதோறும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா

image

பிரீபெய்டு கஸ்டமர்களுக்காக ₹601 விலையில், 1 வருட Unlimited 5G data plan-ஐ ஜியோ அறிமுகம் செய்துள்ளது. 5G பிளானில் இல்லாதவர்கள், குறைந்த ரீசார்ஜ் (1.5GB or 2GB/month data) பிளானில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும். இந்த பிளானில் 12 மாதத்துக்கு 5G Voucher-கள் வழங்கப்படும். அதை Redeem செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளானை வாங்கி ஜியோ பயன்படுத்தும் நண்பர்களுக்கும் பரிசளிக்க முடியும்.

News November 19, 2024

சபர்மதி படத்தை பாருங்க.. பாஜக வேண்டுகோள்

image

குஜராத் கலவரத்துக்கு காரணமாகக் கூறப்படும் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு “சபர்மதி ரிப்போர்ட்” படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை டெல்லியில் பார்த்த பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, கோத்ரா ரயில் எரிப்பு குறித்து உண்மை அப்படியே படமாக எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் காண வேண்டும், கரசேவகர்கள் எரிக்கப்பட்டதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

News November 19, 2024

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்ட தேர்தல்

image

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 4,140 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. பாஜக அதிகபட்சமாக 149 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 101 தொகுதிகளில் களம் காண்கிறது.

News November 19, 2024

கில் இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு: கங்குலி கவலை

image

காயம் காரணமாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஷுப்மன் கில் விளையாடாதது இந்திய அணிக்கு இழப்பு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். “சிறந்த பார்மில் இருக்கும் அவர் விளையாடாதது இந்திய அணிக்கு இழப்புதான். அவர் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்துள்ளார்” என்றார். நியூசி.,க்கு எதிரான தோல்வி இந்த போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

இளம் வயதிலேயே தலையில் வழுக்கையா? தடுக்க சில டிப்ஸ்

image

35 வயதுக்குள் சிலருக்கு வழுக்கை விழுகிறது. இதற்கு இரும்பு, வைட்டமின் D, ஷாம்பு பயன்பாடு காரணமாக கூறப்படுகிறது. எனினும், கீழ்காணும் இந்த டிப்ஸ்களை கடைபிடித்தால் இதை தவிர்க்கலாம் * எண்ணெய் தேய்க்கும் வழக்கம் * சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்பாடு * புரோட்டீன், இரும்பு, ஓமேகா 3 சத்து உணவு எடுக்க வேண்டும் * புகைபிடித்தல், மது அருந்துதலை கைவிட வேண்டும் * ஸ்ட்ரெஸ் தவிர்க்க வேண்டும். SHARE IT

News November 19, 2024

விஜய் படத்தில் சிவராஜ்குமாரா?

image

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அத்தகவலை அவர் மறுத்துள்ளார். இப்படத்தில் நடிப்பது சாத்தியமில்லை எனவும், வேறொரு படத்தில் கண்டிப்பாக இணைந்து பணியாற்றலாம் என ஹெச்.வினோத் கூறியதாகவும் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

CNG கேஸ் விலை ₹5 உயருகிறது; கவலையில் வாகன ஓட்டிகள்

image

சூழல் மாசை குறைக்கும் வகையில் ஆட்டோ, கார்கள் வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இருந்து CNG கேஸுக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், விற்பனையாளர்களுக்கு CNG ஒதுக்கீடு 20% வரை குறைந்ததால், அவர்களுக்கான லாபமும் குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட CNG விலை கிலோவுக்கு ₹5.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது 1 kg CNG ₹90.50க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சுமையாக மாறும்.

News November 19, 2024

களத்தில் நிரூபிங்க சீமான்: சேகர்பாபு பதிலடி

image

சமத்துவம், சமாதானம் பேசுவதால் கோழைகள் அல்ல, எங்களுக்கும் வீரம் இருக்கிறது என சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சில லட்சம் பேர் கொண்ட சீமானின் கரங்களே பேனா சிலையை உடைக்கும் என்றால், ஒரு கோடி பேருக்கு மேல் உள்ள தங்கள் கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்று கேள்வி எழுப்பினார். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்கக்கூடாது, தேர்தல் களத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!