News November 20, 2024

கஸ்தூரியை வெளியே விடுங்க ப்ளீஸ்… அவங்க பாவம்

image

நடிகை கஸ்தூரியோட பெயில் பெட்டிஷன்ல அவங்க என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? தனக்கு ஆட்டிசம் பாதித்த ஒரு மகன் இருப்பதாகவும், அவரை தனியாத்தான் கவனிச்சிட்டு வர்றதாகவும் சொல்லியிருக்காங்க. இதனால, கஸ்தூரி தப்பே செஞ்சிருந்தாலும், அவங்கள ஜெயில்ல இருந்து வெளியே விட்டுடுங்கனு சமூக வலைதளங்கள்ல கோரிக்கை எழுந்துட்டு இருக்கு.

News November 20, 2024

‘செல்வ மகள்’ திட்டம்: இதை மிஸ் பண்ணாதீங்க

image

பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிக வட்டி கிடைக்கும் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது இத்திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ்களிலும் நடந்து வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் இணையாதவர்கள், நவ. 30-ம் தேதி வரை நடக்கும் இந்த முகாம்களில் பங்கேற்று எளிதாக இதில் சேரலாம். Share It.

News November 20, 2024

மிகவும் மந்தமாக நடைபெறும் மகாராஷ்டிரா வாக்குப்பதிவு

image

மொத்தமாக 288 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.61% வாக்குகளே பதிவாகியுள்ளது, மிகவும் மந்தமான நிலையைக் காட்டுகிறது. மதியம், மாலை நேரங்களில் வாக்கு பதிவு தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-ஆம் கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் 9 மணிநிலவரப்படி 12.71% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News November 20, 2024

Happy birthday தேவா தி தேவா

image

”விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி” இப்பாடல் இல்லாத ஊர் திருவிழாவோ, கொண்டாட்டமோ தற்போது வரை இல்லை எனலாம். கானா பாட்டு தான் தேவா என நினைக்கும் இப்போதைய ஜெனரேஷனுக்கு 90’களின் பல ரொமான்டிக் ஹிட் தேவா கொடுத்ததே தான் என்று தெரியவில்லை. எளிய மக்களின் கானா இசையை திரையில் கொடுத்து சிலிர்க்க வைத்தவரின் உச்சத்தை இன்றைக்கும் ரஜினி டைட்டில் கார்டு மியூசிக் சொல்லும். தேவா பாடல்களில் உங்களுக்கு பிடித்தது எது?

News November 20, 2024

ஒரு சாக்லேட் ₹1 கோடி! நம்ம சொத்தே அவளோ இல்ல

image

நம்ம ஊருல விற்ற 50 பைசா சாக்லேட்டை ₹1 ஆக்குனதுக்கே நாம கோவப்பட்டோம். ஆனா, அமெரிக்காவுல ஒரே ஒரு சாக்லேட்டை ₹1 கோடிக்கு வித்துட்டு இருக்காங்க. ஆமாங்க. பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த Sarris Chocolate தொழிற்சாலைல 1,180 கிலோ எடைகொண்ட இந்த சாக்லேட் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கு. 12 x 8 x 3 அடி கொண்ட இந்த சாக்லேட்டை 8 பேர் சேர்ந்து 3 மாசமா உருவாக்கியிருக்காங்க.

News November 20, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤ஹாங்காங் தேர்தலில் பங்கேற்ற 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சீன நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. ➤மியான்மரின் ஒக்கலாபா நகரில் 10 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ➤ஈகுவடாரில் கடும் வறட்சியால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 60 நாட்களுக்கு தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ➤அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 23% உயர்வடைந்துள்ளது.

News November 20, 2024

இனி தமிழக மீனவர்களின் கதி என்ன?

image

தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல், கைது செய்தல், படகுகள் பறிமுதல் என இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபடுகிறது. மீனவர்கள் கைதாவதைத் தடுத்து, படகுகளை மீட்க கோரி ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை கடற்படை பயன்படுத்தி கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டிருப்பது, மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாகியுள்ளது.

News November 20, 2024

2 நாட்கள் முன் காதலிக்க நேரமில்லை என்றார்…இப்போ?

image

ARR விவாகரத்து பலரையும் அதிரச் செய்துள்ளது. நவ. 18-இல் அவரின் பதிவைப் பார்த்தால், இது என்னடா coincidence என யோசிக்க வைக்கிறது. Something awesome is coming soon, Stay tuned for a surprise that will steal your heart! எனப் பதிவிட்டுள்ளார். இது ஒரு பட அறிவிப்பு தான். ஆனால்,வேறொரு செய்தியை சொல்லி அதிர வைத்து விட்டார் ARR. இதில் கூடுதல் தகவல் என்ன தெரியுமா? படத்தின் பெயர் “காதலிக்க நேரமில்லை”.

News November 20, 2024

தங்கம் விலை ₹400 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹56,920க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹7,115க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ₹1,440 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ₹101, கிலோ ₹1,01,000க்கும் விற்கப்படுகிறது.

News November 20, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன? 2) CCO என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உருது இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 4) கோளக வடிவப் பொருட்களின் வளைவை அளக்க உதவும் கருவி எது? 5) ‘பாண்டியன் பரிசு’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 6) மிசா சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 7) வானவில்லில் அதிகமாக ஒளி விலகலடையும் நிறம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

error: Content is protected !!