News November 20, 2024

திணறும் டெல்லி : நாட்டின் தலைநகரை மாற்ற முடியுமா?

image

காற்று மாசால் தவிக்கும் டெல்லி தலைநகராக தொடரவேண்டுமா? என்ற கேள்வியை சசி தரூர் எழுப்ப, அது விவாதப் பொருளாகியுள்ளது. ஏற்கனவே 8 நாடுகள் தலைநகரை மாற்றியுள்ளன. நைஜீரியா(Lagos-Abuja), மியான்மர்(Yangon-Naypyidaw), ரஷ்யா(St.Petersburg-Moscow), பாகிஸ்தான்(Karachi-Islamabad), பிரேசில்(Rio de Janeiro-Brasília), கஜகஸ்தான்(Almaty-Astana), தான்சானியா(Dar es Salaam-Dodoma), ஐவரி கோஸ்ட்(Abidjan-Yamoussoukro).

News November 20, 2024

கண்டெய்னர் வணிகத்தில் களமிறங்கும் இந்தியா

image

உலகளவில் மிகப்பெரிய வர்த்தகத் துறைகளில் ஒன்றாக கண்டெய்னர் போக்குவரத்து வணிகம் உள்ளது. அந்த வணிகத்தில் ஈடுபட மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வேயின் ‘கான்கோர்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளில் கண்டெய்னர் போக்குவரத்தில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. இது தொடர்பாக ஆய்வறிக்கை அளிக்க EY, KPMG & PwC போன்ற நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 20, 2024

நாதக மா.செ.க்கள் அதிமுகவில் ஐக்கியம்

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அதிமுகவில் இணைந்தார். அவருடன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரான மணிகண்டனும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார். அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் முன்னிலையில் இருவரும் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருவரும் அக்கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

மராட்டியத்தில் அரசியல் புயலை கிளப்பும் பிட்காயின் மோசடி

image

மகாராஷ்டிராவில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில், சரத்பவாரின் NCP-யும், Cong., கட்சியும் பிட்காயின் மோசடி மூலம் பெற்ற பணத்தை, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக Ex.IPS ரவீந்திர பாட்டீல் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் இதை மறுத்துள்ளன. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக நேற்று பல கோடி பணம் பாஜக ஆதரவாளரிடம் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News November 20, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) அஜந்தாவில் மொத்தம் குகைகள் 29 உள்ளன 2) CCO என்பதன் விரிவாக்கம் – Chief Commercial Officer 3) உருது இலக்கியத்தின் தந்தை – சூஃபி ஞானி அமீர் குஸ்ரோ 4) கோளக வடிவப் பொருட்களின் வளைவை அளக்க உதவும் கருவி – Spherometer 5) ‘பாண்டியன் பரிசு’ நூலின் ஆசிரியர் – பாரதிதாசன் 6) மிசா சட்டம் 1971 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 7) வானவில்லில் அதிகமாக ஒளி விலகலடையும் நிறம் – குறைந்த அலைநீளத்தை கொண்டது ‘ஊதா’ நிறம்.

News November 20, 2024

இனி தியேட்டரில் FDFS ரிவியூ கூடாது: தயாரிப்பாளர் சங்கம்

image

படங்களின் முதல் காட்சி முடிவதற்கு முன்பே படத்தின் ரிவியூ வெளியாகி, படத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. இது வசூலையும் பாதிக்கிறது. இதனால், FDFS ரிவியூக்களுக்கு திரையரங்கு வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என திரையரங்கு உரிமையாளர் சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அண்மையில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

இன்று 12 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, நெல்லை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

News November 20, 2024

ஆசிரியை படுகொலை: இபிஎஸ் ஆவேசம்

image

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி (26) கொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், தமிழகத்தில் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக விமர்சித்தார். மேலும், சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வர் கவனம் செலுத்தும்படியும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

News November 20, 2024

கஸ்தூரிக்கு கருணை: நீதிபதி மனைவி கோரிக்கை

image

நடிகை கஸ்தூரிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கஸ்தூரிக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இருக்கிறது. சிறப்புக் குழந்தையை கஸ்தூரி தனி ஆளாக போராடி வளர்த்து வருகிறார். எனவே, குழந்தையின் நிலையை கருத்தில்கொண்டு அவரது ஜாமீன் மனுவை கருணையோடு அணுக வேண்டும்” என காமாட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 20, 2024

விவாகரத்தை A.R.ரஹ்மான் எப்படி அறிவித்தார் தெரியுமா?

image

தனது விவாகரத்து செய்தியை ஏ.ஆர்.ரஹ்மான் ஹேஷ்டேக் போட்டு அறிவித்த விவகாரம் இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக X தளத்தில் அறிவித்த ரஹ்மான், அதே போஸ்டில் #arrsairaabreakup என ஹேஷ்டேக் போட்டிருந்தார். வழக்கமாக, ஒரு விஷயத்தைப் பற்றி மக்களை அதிகமாக பேச வைக்கத்தான் ஹேஷ்டேக்-ஐ பயன்படுத்துவர். அது தெரியாமல் ரஹ்மான் செய்த விஷயம் கேலிப் பொருளாகியிருக்கிறது.

error: Content is protected !!