News November 20, 2024

EXIT POLL: உ.பி., இடைத்தேர்தல்; பாஜக முன்னிலை

image

உத்தரப் பிரதேசத்தின் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே நேரடி போட்டி இருந்த நிலையில், DNA-வின் கருத்துக்கணிப்பின் படி, பாஜக 4 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றும். எதிர்கட்சியான சமாஜ்வாதி, 3 முதல் 5 தொகுதிகளை கைப்பற்றலாம். காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

News November 20, 2024

TIMES NOW: ஜார்கண்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்

image

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக TIMES NOW நடத்திய EXIT POLL வெளியாகியுள்ளது. அதில், மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 42 முதல் 47 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி 25 முதல் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பிற கட்சிகள் 1 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

Peoples Pulse: ஜார்கண்டில் BJP வெற்றி என கணிப்பு

image

Peoples Pulse நடத்திய கருத்துக் கணிப்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக+ – 44 – 53
காங்கிரஸ்+ – 25 – 37
மற்றவை – 5 – 9

News November 20, 2024

TIMES NOW: மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்

image

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து TIMES NOW நடத்திய EXIT POLL விவரம் வெளியாகியுள்ளது. அதில் ஆளும் பாஜக சிவசேனா கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத்பவார் கட்சி கூட்டணி 110-130 தொகுதிகளில் வெற்றி பெறும். பிற கட்சிகள் 8-10 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

ஆட்சியை தக்கவைக்கும் பாஜக

image

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ஆரம்பகட்ட கருத்துக் கணிப்புகளில் உறுதியாகியுள்ளது. கடந்த முறை உடைந்த கட்சிகளான சிவசேனா (ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) ஆகியோரின் தயவால் ஆட்சி நடத்தும் நிலையில் பாஜக இருந்தது. ஆனால், இம்முறை 150+ இடங்களில் போட்டியிட்ட நிலையில், ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News November 20, 2024

Peoples Pulse: மராட்டியத்தில் பாஜகவுக்கு வெற்றி என கணிப்பு

image

Peoples Pulse நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக – 175 -195
காங்கிரஸ் – 85 – 112
மற்றவை – 7 – 12

News November 20, 2024

P MARQ, Matrix: பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு

image

P MARQ, Matrix Survey நடத்திய Exit poll கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான Mahayuti கூட்டணி 137-157 தொகுதிகளில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி 126-146இல் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், Matrix Exit polls கணிப்பில் பாஜக கூட்டணி 150-170இல் வெற்றி பெறும் என்றும், MVA கூட்டணி 110-130இல் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

EXIT POLLS: ஜார்கண்டில் பாஜக வெல்லும் என கணிப்பு

image

People’s Pulse நடத்திய EXIT POLLS கணிப்பில், ஜார்கண்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 42- 48 தொகுதிகளில் வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஹேமந்த் சோரனின் JMM கட்சி 16-23 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 8-14, AJSU 2-5, பிற கட்சிகள் 6-10 வெற்றி பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

ABP: மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி என கணிப்பு

image

ஏபிபி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 150 முதல் 170 தொகுதிகளை வென்று ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை 8 முதல் 10 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.

News November 20, 2024

தேர்தல் முடிந்தது… வே2நியூஸில் விரைவில் EXIT POLL

image

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் தலைவர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வே2நியூஸில் கருத்துக் கணிப்புகள் வெளியாகும். காத்திருங்கள்!

error: Content is protected !!