News November 21, 2024

குற்றவாளிகளிடம் மென்மை போக்கு ஏன்? ஓபிஎஸ்

image

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை ஆசிரியர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த அவர், தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஒருவித அச்சத்துடனே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும் குறை கூறியுள்ளார். குற்றவாளிகளிடம் திமுக அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பதே இத்தகைய கொலைகள் நிகழ காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 21, 2024

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

image

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவை (1-0) என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தீபிகா அடித்த ரிவர்ஸ் ஹிட் கோல் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. லீக் சுற்றிலும் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்தியா பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2024

சீன அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

image

கல்வான் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சீன அமைச்சரிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். லாவோஸ் நாட்டில் ஆசியான் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்ற ராஜ்நாத் சிங், அங்கு வந்த சீன அமைச்சரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர்.

News November 21, 2024

IDBI வங்கியில் 600 காலியிடங்கள்.. உடனே APPLY

image

IDBI வங்கியில் 600 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 600 இடங்களும் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் நிலையிலான பதவிகள் ஆகும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் www.idbibank.in இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 30ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை குறித்த கூடுதல் தகவலை www.idbibank.inஇல் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News November 21, 2024

கூட்டணி குறித்து பேச வேண்டாம்: H.ராஜா

image

கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்துகளை கூற வேண்டாம் என நிர்வாகிகளிடம் BJP மூத்த தலைவர் H.ராஜா அறிவுறுத்தியுள்ளார். நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், பாஜகவின் உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என்றார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தமிழக அரசின் முழு தோல்வியை காட்டுவதாக விமர்சித்த அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவுள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

News November 21, 2024

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

image

புரோ கபடி லீக் தொடரில் யு மும்பா அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்றது. 12 ஆட்டங்களில் ஆடியுள்ள யு மும்பா அணி 7 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

News November 21, 2024

ரஃபேல் நடாலுக்கு தனுஷ் புகழாரம்

image

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்கு, நடிகர் தனுஷ் புகழாரம் சூட்டியுள்ளார். “நீங்கள் இல்லாமல் டென்னிஸ் அதே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை, நன்றி நாடால்” எனத் தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் நாடால், 14 முறை பிரெஞ்சு ஓப்பனை வென்று சாதனை படைத்துள்ளார். ஓய்வு முடிவை எடுத்துள்ள நடாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

News November 21, 2024

‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் மீண்டும் சாதித்த பாண்டியா

image

‘டி-20’ போட்டிக்கான ‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா, மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். 244 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து மீண்டும் ‘நம்பர்-1’ இடத்துக்கு வந்துள்ளார். இதற்கு முன், ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கு பின் வெளியான தரவரிசையில் முதன்முறையாக ‘நம்பர்-1’ இடம் பிடித்திருந்தார். ‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் வேறு IND வீரர்கள் இடம் பெறவில்லை.

News November 21, 2024

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்

image

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் (59) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டிச.12ஆம் தேதியோடு பதவி காலம் முடியும் நிலையில், அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சஸ்பெண்ட் செய்துள்ளார். தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் எதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் துணைவேந்தர் யாரும் இப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில்லை.

News November 21, 2024

அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உக்ரைன்?

image

போர் களத்தில் டப் கொடுத்து வரும் உக்ரைனிடம் இல்லாத ஒரே ஆயுதமான அணுகுண்டு ரஷ்யாவிடம் உள்ளது. இது அந்நாட்டின் வலிமையை ஒருபடி மேலே நிற்க வைத்துள்ளது. இதை மனதில் வைத்து, தன்னிடம் இருக்கும் 7 டன் புளுடோனியம் ராடுகளை வைத்து அணுகுண்டை உக்ரைன் தயாரிப்பதாகவும், 1945இல் நாகசாகியில் வீசப்பட்டது போன்ற அணுகுண்டை சில மாதங்களில் அந்நாட்டால் உருவாக்கி விட முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!