India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க அதிபராக இன்னும் ஒரு சில மாதமே ஜோ பைடன் இருக்கப் போகிறார். அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதால், அவர் விரைவில் அதிபராக வரும் ஜனவரி 20-இல் பதவியேற்பார். இது ஒருபுறம் இருக்க, ஜோ பைடன் தனது 82-வது வயதில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் வயதான அமெரிக்க அதிபர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
தங்கள் மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு அதானி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நீதித்துறை, பரிமாற்ற ஆணையம், அதானி குழுமத்தின் இயக்குநர்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவை வெறும் குற்றச்சாட்டு தான், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகள்தான். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் கருவிகள் பற்றிய குறிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எந்த நவீன இயந்திரங்களும் இல்லாத காலத்தில் தமிழர்கள் பல நுண் பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றை அன்றாடம் பயன்படுத்தியும் உள்ளனர். அதில் ஒன்று கத்திரிக்கோல். இது ‘மயிர்குறை கருவி’ (29) என பொருநராற்றுப்படையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இது தலை முடியைச் சீர்செய்யும் ஒப்பனைக் கலையும் இருந்துள்ளதைக் காட்டுகிறது.
சென்னையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.25 முதல் டிச.20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்திற்கான பிரச்னைகள் குறித்துப் பேச அறிவுறுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.
‘Ormax’ நிறுவனம் மாதந்தோறும் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் இதில் விஜய் முதல் இடத்தில் இருந்த நிலையில், இந்த மாதம் அவரை பின்னுக்குத் தள்ளி பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2. விஜய், 3. ஷாருக் கான், 4. ஜூனியர் NTR, 5. அஜித், 6. அல்லு அர்ஜுன், 7. மகேஷ் பாபு, 8. சூர்யா, 9. ராம் சரண், 10. சல்மான் கான் ஆகியோர் உள்ளனர்.
ஒடிஷாவில், போலாங்கிர் மாவட்டம், ஜுரபந்தா கிராமத்தில் 20 வயது பெண்ணுக்கு நடந்துள்ள கொடூரம், மனிதன் ஆறறிவு கொண்டவன் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பழங்குடியினப் பெண்ணின் நிலத்தில், ஒருவன், டிராக்டரை ஓட்டி வந்துள்ளான். பயிரை சேதப்படுத்தாதே என்று அவனை அப்பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண்ணை அடித்து, வாயில் மலத்தைத் திணித்து, அவன் கொடுமைப்படுத்தி உள்ளான். போலீஸ் அந்நபரை தேடி வருகிறது.
107 போட்டிகளில் ஆஸி. 45 போட்டியிலும், இந்தியா 32லும் வெற்றி பெற்றுள்ளன. 29 போட்டிகள் டிரா, 1 போட்டி டை. அதிக ரன் எடுத்தவர்கள் – சச்சின் (39 மேட்ச் – 3630 ரன்கள்), பாண்டிங் (29 மேட்ச் – 2555 ரன்கள்), VVS லக்ஷ்மன் (29 மேட்ச் – 2434 ரன்கள்). அதிக விக்கெட் எடுத்தவர்கள் – நாதன் லயன் (27 மேட்ச் – 121 விக்கெட்டுகள்), அஸ்வின் (22 மேட்ச் – 114 விக்கெட்டுகள்), கும்ப்ளே (20 மேட்ச் – 111 விக்கெட்டுகள்).
அதானி குழுமத்துக்கு சர்ச்சைகள் புதிதல்ல. ஆனால், எப்போதெல்லாம் அதானி குழுமம் முதலீடு திரட்ட திட்டமிடுகிறதோ, அப்போதெல்லாம், அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகின்றன. 2023-இல் அதானி FPO வெளியிடும் நேரத்தில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு வெளியானது. தற்போது நியூயார்க் ஷேர் மார்க்கெட்டில் 5700 கோடி திரட்ட பாண்ட் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் லஞ்சப் புகார் எழுந்துள்ளது.
அதானி நிறுவனம் இந்திய மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பல திட்டங்களை அதானி நிறுவனம் செயல்படுத்தி வருவதால் திமுக, அதிமுக கட்சிகள் சர்ச்சை வளையத்திற்குள் சிக்கியுள்ளன. 2014, 2024 என இரு கட்சிகளின் ஆட்சியிலும் அதானி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.
மருத்துவத்துறை அபரிமிதமாக வளர்ந்து வரும் சூழலில், மனிதர்களின் வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்கள் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்டெம் செல் ஆராய்ச்சி வெற்றி பெறும்பட்சத்தில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மனிதர்கள் 150 வயது வரை வாழ்வார்கள் என டாக்டர் எர்ன்ஸ்ட் வான் ஸ்வார்ஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.