India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IND-AUS இடையேயான முதல் BGT டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் AUS அணிக்கு எதிராக மோதவுள்ள இந்திய அணி ஆடும் XI குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வீரர் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் நிதிஷ்குமார் ரெட்டி அறிமுகமாக உள்ளார். இந்திய XI: ஜெய்ஸ்வால், ராகுல், படிக்கல், கோலி, பண்ட், ஜுரல், நிதிஷ் குமார் ரெட்டி, அஸ்வின், பும்ரா(c), சிராஜ், ஆகாஷ் தீப்.
கல்வி, வேலை உள்ளிட்ட பல காரணங்களால் நம் தாயை பிரிந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கவனமின்மை, மன அழுத்தம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் நம் தாயுடன் போனில் பேசினாலே மன அழுத்தம் குறையும் என்கின்றன ஆய்வுகள். தாயின் குரலை கேட்கும் போது சமூக பிணைப்புகளை உண்டாக்கும் oxytocin ஹார்மோன் உடலில் சுரந்து, அவர்கள் அரவணைப்பை பெறுவது போல உணர வைக்குமாம். உடனே உங்க அம்மாவிடம் பேசிப்பாருங்க.
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. போர் தொடங்கி 1000 நாள்களை கடந்த நிலையில், நீண்ட தூரம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது போர் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்தும், அழைப்பு வந்தால் தவெகவில் இணைவீர்களா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சத்யராஜ், TVKவில் இருந்து அழைப்பு வந்தால் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கேட்பேன். நம்ம விஜய் கொடுப்பார் எனக் கூறினார்.
மழை நிலவரம் குறித்த எச்சரிக்கையில் RED ALERT என்ற வார்த்தை அவ்வப்போது வானிலை மையத்தால் பயன்படுத்தப்படுவது உண்டு. இதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம். RED ALERT என்ற வார்த்தை, அதி கனமழை பெய்யக்கூடும் என்பதை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தை. இதுபோல் RED ALERT விடுக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யும். மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அர்த்தமாகும்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2 தி ரூல்’ டிச.5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், முதல் பாகத்தை விட டிரெயிலர் மாஸ் மற்றும் கிளாஸாக இருந்தது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவருடைய கிட்டாரிஸ்ட் மோகினியும் ஒரே நேரத்தில் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளான நிலையில், ரஹ்மான் மனைவி சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனா விளக்கமளித்துள்ளார். “ரஹ்மான், சாய்ரா மட்டுமே எடுத்த முடிவு இது. வேறு எதனுடனும் தொடர்புபடுத்த வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்றத்தேர்தலுக்கு <
விஜய் தேவரக்கொண்டா – ரஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக பேசப்படுகிறது. இன்டர்வியூ ஒன்றில் விஜய் தேவரக்கொண்டா பேசும் போது, எனக்கு தற்போது 35 வயதாகிவிட்டது, இன்னும் நான் சிங்கிளாக இருப்பேன் என நம்புகிறீர்களா? எனத் தெரிவித்து, நீண்ட நாட்களாக எனக்கு தெரிந்த நடிகையை டேட் செய்து வருகிறேன் என்றார். இது ரஷ்மிகாவாகவே தான இருப்பாங்க? நீங்க என்ன நீனைக்குறீங்க
தானும் CM ஆக வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு முன் பேசியிருப்பதாக திருமாவளவன் நினைவுகூர்ந்துள்ளார். இன்று அதற்கான முதல் புள்ளியை வைத்துள்ளதாகவும், கோலங்கள் போட இன்னும் பல புள்ளிகள் தேவை என்றும் கூறிய அவர், சிலர் கட்சி ஆரம்பித்த உடனே CM ஆக வேண்டுமென்ற கனவோடு இருப்பதாகவும், விஜய்யை மறைமுகமாக சாடினார். மேலும், தமிழகத்தில் மாற்றத்தை, திருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக விசிக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.