India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் உள்ள திமுக-அதிமுக என்ற இருதுருவ அரசியலை உடைக்க பாஜக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆவது இடத்தில் அமர பாஜக முயற்சித்து வருகிறது. அதனால்தான் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அட்வைஸ் செய்து வருகிறோம். ஒரு கட்சிக்கு கரிசனமாக சொல்வதை கூட்டணிக்கான சிக்னல் என புரிந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகம், இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தற்போதைய சுழற்சி வலுப்பெற்று புயலாக தீவிரமடைந்தால், தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த புயலுக்கு ‘பெங்கல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலால் சென்னைக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சில வானிலை பதிவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. WTC பைனலுக்கு இந்தியா செல்ல வேண்டும் எனில் நிச்சயம் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் BGT தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்தியாவை washout செய்யும் என ஆஸி. பவுலர் நேதன் லயன் கணித்துள்ளார். லயன் கணிப்பு குறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை என அமைச்சர் KN நேரு கூறியுள்ளார். தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக அவர்கள் இதுபோன்று பேசுவதாக கூறிய அவர், அதில் எந்த உண்மையும் இல்லை என்றார். முன்னதாக, நேற்று ஒரே நாளில் பள்ளியில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதற்கும், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. முதல் இரு கட்ட தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 3ம்கட்ட தேர்வானது நவ.25 முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3 மற்றும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
‘விடுதலை-2’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?
உலகின் செக்ஸ் தலைநகராக டோக்யோ மாறி வருவது ஜப்பானியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டு காலமாக பாலியல் தேவை கொண்டோர் தாய்லாந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது, ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பாலியல் தொழில் அதிகரித்திருப்பதால் செக்ஸ் விரும்பிகள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஜப்பானில் அதிகரித்து வரும் ஏழ்மை, அந்நாட்டு பெண்களை இந்த அவல நிலைக்கு தள்ளியிருக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டி, பெர்த் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. கேப்டன் ரோஹித்தின் மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால், அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்படவுள்ளார். பாேட்டி இந்திய நேரப்படி நாளை காலை 7.50 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் போட்டியை நேரலையாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்ய அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தின் ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் உடனான மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்துக்கான கொள்முதல் செயல்முறை என இரு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். மேலும் அதானி குழுமத்தின் முன்மொழிவை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.