News November 21, 2024

FLASH: ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு

image

ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியை சந்தித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

News November 21, 2024

ரூ. 52 கோடிக்கு விலை போன வாழைப்பழம்

image

நாம் அன்றாடம் சாப்பிடும் வாழைப்பழம் ஒன்று ரூ. 52 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. டேப் மூலம் சுவரில் ஒட்டிய வாழைப்பழத்தை, இத்தாலியை சேர்ந்த மொரிசியோ கட்டெலன் என்பவர் வடிவமைத்தார். இது நியூயார்க்கில் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. மேலும் உலகளவில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட பழமும் இதுதான். இதை பார்க்கும் நெட்டிசன்கள் அப்படி இந்த வாழப்பழத்துல என்ன இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

News November 21, 2024

குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்ட காசா!

image

காசா குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸ்சாரிணி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீன குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களது பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு என அனைத்தையும் இழந்து விட்டனர் என்ற அவர், அவர்களின் குழந்தைப் பருவம் திருடப்பட்டுவிட்டது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

News November 21, 2024

பெருமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்

image

மிக கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். நவ.25 முதல் 27 வரை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெருமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில், உள்ளதாக ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

News November 21, 2024

இரவு உணவில் இதையும் சேர்த்துக்கோங்க!

image

*பெர்ரி, வாழைப்பழம், கிவி, ஆப்பிள் ஆகியவற்றில் ஒன்றை நாள்தோறும் சாப்பிடலாம்.
*பூசணி விதை, பாதாம், வால்நட் ஆகியவை நல்ல தூக்கத்திற்கு கியாரண்டி.
*புரதச்சத்து மிக்க பால், முட்டை, காட்டேஜ் சீஸ் ஆகியவை தசைகளை பராமரிக்க உதவும்.
*நார்ச்சத்து, மெக்னீஷியம், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ட்ரிப்டோன், மெலடோனின் ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

News November 21, 2024

விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரை ஏமாற்ற முயற்சி

image

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரை மோசடி நபர்கள் ஏமாற்ற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர்புரத்தில் வசிக்கும் அவரை தொடர்புகொண்ட மர்மநபர், தங்களை கர்நாடக போலீஸ் எனக் கூறியதுடன், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி வாடகைக்கு எடுத்த கார் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி வங்கிக் கணக்கு எண்ணை கேட்டுள்ளனர். சுதாரித்துக்கொண்ட அவர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.

News November 21, 2024

500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஓலா..!

image

ஓலா நிறுவனம் மீண்டும் பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனால் 500 ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் 3 முறை ஓலா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அடிக்கடி பழுது, முறையான சர்வீஸ் வசதிகளை செய்யாதது என EV வாங்கிய 10,000 பேர் புகார் அளித்ததால், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் ஓலா இருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2024

ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லையா? அதிர்ச்சி தகவல்

image

ஆண்களில் இருபாலின சேர்க்கை (Bi-sexual) மற்றும் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளோர் மீது அதிகமான பாலியல் கொடுமை இழைக்கப்படுவதாக அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை உறவுகளில் ஈடுபடுவோரில் பெண் தன்மைகளை வெளிப்படுத்துபவர்களுக்கு (உறவில் உட்படுபவராக இருப்பவர்கள்), வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது 61% அதிகமாக உள்ளதாம். ஆக, ஆண்களுக்கும் இப்போது பாதுகாப்பு இல்லை.

News November 21, 2024

₹20 லட்சம் கொடுத்து பணிக்கு சேர விரும்பும் 10,000 பேர்

image

Zomato-வில் ₹20 லட்சம் கொடுத்து பணிக்கு சேர 10,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனத்தின் CEO தீபிந்தர் தெரிவித்துள்ளார். Chief of Staff பதவிக்கு, முதல் 1 வருடம் சம்பளம் வழங்கப்படமாட்டாது. ஓராண்டு கழித்து தேர்வானால், ₹50 லட்சம் சம்பளம் கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த கண்டிஷன் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இருப்பினும், பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

News November 21, 2024

ஷில்பா ஷெட்டிக்கு ரூட் க்ளியர்

image

நடிகை ஷில்பா ஷெட்டி மீது பதிவான SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ராஜஸ்தான் ஐகோர்ட் ரத்து செய்தது. கடந்த 2013-ல் டிவி நிகழ்ச்சியின் போது, பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், உள்நோக்கத்துடன் அவர் அந்த வார்த்தையை குறிப்பிடவில்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

error: Content is protected !!