India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யாவின் 45ஆவது படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சூர்யா- த்ரிஷா ஜோடி, கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆறு’ இணைந்து நடித்தது. அதற்கும் முன்னதாக, ‘மௌனம் பேசியதே’ படத்தில் இணைந்து நடித்தனர்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜியா மின் 16-21 21-17 21-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என இபிஎஸ் எப்போதாவது கூறினாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். சமூக வலைத்தளங்களில் ஆயிரம் பேசுவார்கள், அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்ற அவர், அதிமுக மீண்டும் 2026இல் ஆட்சி அமைக்கும் என்பது மட்டும் உறுதி என்றார்.
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். உதடு, கன்னம், நாக்கு பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். மேலும், மணத்தக்காளி இலைகளை சாப்பிடுவதும் புண்ணை குணப்படுத்தும்.
1939 – உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்
1963 – அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1989 – பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
2005 – ஏஞ்சலா மெர்க்கல் ஜெர்மன் அதிபராக பதவியேற்றார்.
2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 32-26 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹரியானா அணி 46 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மை என்றும் அவர் சாடியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 106
▶குறள்:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
▶பொருள்: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
மாமல்லபுரத்தில் சர்வதேச பீச் வாலிபால் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் பீச் வாலிபால் போட்டிகள் மீண்டும் நடக்கிறது. இன்று முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர். அவர்களின் கோரிக்கையை கேட்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Sorry, no posts matched your criteria.