News November 22, 2024

அதானியை அமெரிக்கா கைது செய்யுமா?

image

சூரிய சக்தி மின் ஒப்பந்தத்தைப் பெற முறைகேட்டில் ஈடுபட்ட கவுதம் அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ரகசிய நடவடிக்கைகள், நாடுகடத்தல் ஒப்பந்தம் மூலம் மட்டுமின்றி Extraordinary Rendition முறையிலும் அவரை அமெரிக்காவில் கைது செய்ய முடியும் என்கிறார்கள். அந்நிய நாட்டின் அனுமதி இல்லாமல் அந்நாட்டில் உள்ள குற்றவாளி மீது CIA ஆக்ஷன் எடுத்த கடந்த வரலாறுகள் இருக்கின்றன.

News November 22, 2024

’அண்ணாமலை’ பெயரைக் கேட்டவுடன் சூடான BJP கூட்டம்

image

சென்னையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார் அரவிந்த் மேனன். அதற்கு கரு.நாகராஜன், “தலைவர் அண்ணாமலை வந்தபின் கூட்டணி குறித்து பேசுவதுதான் சரி” என்று கூறியிருக்கிறார். உடனே இடைமறித்த H.ராஜா, “இப்போது யாரும் கூட்டணி பற்றி பேசவில்லை. அமைதியாக இருங்கள்” என்று காட்டமாக பதிலளித்தவுடன் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்தப் பேச்சு கைவிடப்பட்டது.

News November 22, 2024

அஸ்வின், ஜடேஜாவிற்கு பதிலாக அறிமுகமாகும் இளம் வீரர்கள்

image

இன்று தொடங்கவுள்ள ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது. இவர்களுக்கு பதிலாக நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தரை அணி நிர்வாகம் பெரிதளவில் நம்புவதாகக் கூறப்படுகிறது. அதே போல, இளம் வீரர்களான ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாக இருக்கிறார்கள் எனப்படுகிறது.

News November 22, 2024

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக் கடலில் நாளை (நவம்பர் 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, மேலும் வலுவடைந்து ‘பெங்கல்’ புயலாகவும் வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக, 25ஆம் தேதி முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது.

News November 22, 2024

பழனி முருகன் ஆலயத்தின் சிறப்புகள்

image

பழனி முருகன் மலைக்கோயில் 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார்.

News November 22, 2024

ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம்?

image

1 முதல் 27 முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானலும் அணியலாம். பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம். ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்திர உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணிய வேண்டும்.

News November 22, 2024

PAK துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

image

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் நேற்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 14 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இந்த தீவிரவாத சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

News November 22, 2024

சீனா மாஸ்டர்ஸ்: லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி

image

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். சீனாவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்முஸ் ஜெம்கியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-16, 21-18 என்ற நேர்செட்டில் ராஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

News November 22, 2024

முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சி அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எம்பிக்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்குவார் எனத் தெரிகிறது.

News November 22, 2024

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

image

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் டெஸ்டில் ரோஹித் விளையாடாத காரணத்தால், பும்ரா கேப்டனாக அணியை வழி நடத்தவுள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!