India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Online Dating-ல் லேட்டஸ்ட் டிரெண்ட், ‘Throning’ டேட்டிங். வழக்கமாக ரிலேஷன்ஷிப், லவ்வுக்காக டேட்டிங் செய்வார்கள். ஆனால், இன்றைய Gen Z தலைமுறையினர், தங்கள் ஸ்டேட்டஸை உயர்த்திக் காட்ட, தன்னைவிட எல்லா விதத்திலும் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவரை டேட்டிங் செய்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவிடுகிறார்களாம். இதனால் அவர்களின் ஸ்டேட்டஸ் உயர்வதாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த டேட்டிங் உறவு நீடிப்பதில்லையாம்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் திடீரென ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாகக் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த சீமான், அவருடன் நிறைய பேசினேன். அனைத்தையும் பகிர முடியாது என்றார். மேலும், அரசியல் என்பது வாழ்வியல், அதன்மீது ரஜினிக்கு ஆர்வமுண்டு, ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது என்றும் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் கட்சி நிர்வாகிகளை நேற்று அவர் சந்திக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து சேலம் வந்த அவர், தொடர்ந்து அடுத்தடுத்து கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் சேலத்தில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும். கொல்லம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுடன் இந்த ஆன்லைன் நீதிமன்றம் இணைந்து 24/7 செயல்படும். முதற்கட்டமாக செக் மோசடி வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.
நடைபெற்று வரும் BGT முதல் டெஸ்டில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், படிக்கல் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். இதன் மூலம், இந்த வருடத்தில் அதிக டக் அவுட்டுகளை (33) கொண்ட அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. பும்ரா 5 முறையும், கில், சர்ஃபராஸ், சிராஜ் தலா = 3 முறையும் டக் அவுட்டாகி உள்ளனர். இப்பட்டியலில் இங்கிலாந்து (25), வங்கதேசம் (19), தென்னாப்பிரிக்கா (18) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சென்னை பட்டாபிராமில் ரூ.297 கோடி மதிப்பீட்டில் 21 மாடிகளைக் கொண்டு டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 24 நேரமும் கண்காணிப்பு வசதி, அரங்கம், ஜிம், மருத்துவ மையம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. 13 மற்றும் 16-வது மாடிகளுக்கு இடையே தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பார்க் மூலம் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஷாலினியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த லெக்சஸ் காரை நடிகரும், அவரது கணவருமான அஜித் பரிசாக வழங்கியுள்ளார். கார், பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையே கார் ரேஸில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி 44வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாலினிக்கு வெளிநாட்டில் உள்ள அஜித் ரூ.69 லட்சம் மதிப்பிலான காரை கிப்ட் கொடுத்துள்ளார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பெற்ற மகளை (13) தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அச்சிறுமியின் பெரியப்பா மகனும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. “தந்தையும் அண்ணனும் தானே? விட்டுடு மா” என்று போலீசே இந்த விவகாரத்தை பஞ்சாயத்து பேசி முடித்து வைத்திருப்பதுதான் உச்சபட்ச கொடுமை. இவங்களை எல்லாம் என்ன செய்யறது மக்களே?
தவெக மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கருத்து கேட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் மா.செக்கள் 100 பேர், அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
‘ஹலோ’ – இந்த வார்த்தையை தினமும் 10 முறையாவது பயன்படுத்தி விடுவோம். ஆனால், இந்த வார்த்தை எப்படி வந்தது என்பது தெரியுமா? ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி படி, ‘ஹலோ’ என்பது தொலைவில் இருப்பவரை அழைக்க பயன்படுத்தப்பட்ட holla, hollo என்ற வார்த்தைகளில் இருந்து வந்துள்ளது. பழைய ஆங்கில சொற்றொடரான ’hale be thou’ என்பதிலிருந்து இச்சொல் பெறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், ‘ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ .
Sorry, no posts matched your criteria.