News November 23, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 107
▶குறள்:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
▶பொருள்: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

News November 23, 2024

செந்தில் பாலாஜி வழக்கு நவ.29க்கு ஒத்திவைப்பு

image

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை நவ.29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை தரப்பில் தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநரிடம், செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. அதை தொடந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News November 23, 2024

ஆட்சியில் பங்கேற்கும் காலம் வரும்: மாணிக்கம் தாகூர்

image

தமிழகத்தில் ஆட்சியில் பங்கேற்கும் காலம் வரும் என CONG எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். காங்கிரஸ் மத்தியில் ஆளலாம், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒரு நண்பனாக மட்டுமே இருக்க முடியும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், ஆட்சி அதிகாரம் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சார்ந்தது கிடையாது என்றார். அமைச்சரின் கருத்து திமுகவின் கருத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் – 23 ▶கார்த்திகை – 08 ▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04.45 PM – 5.45 PM
▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 01:15 AM & 09:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம்
▶நட்சத்திரம் : மகம் இ 11.34

News November 23, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

பாஜக கூட்டணியில் இடம்பெறுமா த.வெ.க? குஷ்பு

image

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசும் போது, திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விஜய் தான் அதற்கான வியூகத்தை தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கூறினார். தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் மேல் இருப்பதால், அப்போது அணிகளும், முடிவுகளும் மாறும் என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி, அமித்ஷாவின் வியூகங்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்தார்.

News November 23, 2024

திசை மாறும் போர்: புதின்

image

உக்ரைனுடனான போர் திசை மாறுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், இந்தப் போர் உலகளாவிய மோதலை நோக்கி விரிவடைந்து வருகிறது என்றார். மேலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்தால் தீர்க்கமாக பதிலளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் 3ஆவது ஆண்டை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

சாம்பியன்ஸ் டிராபி; 26ஆம் தேதி கூடுகிறது ஐசிசி!

image

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பான குழப்பம் நிலவி வருவதால் வரும் 26ஆம் தேதி ICC அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் BCCI மற்றும் PCB அதிகாரிகள் பங்கேற்பார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை hybrid modeஇல் நடந்த வேண்டும் என BCCI கூறிய வருகிறது. ஆனால் அதை ஏற்க PCB மறுப்பதால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சமரசம் செய்ய ஐசிசி முயற்சித்து வருகிறது.

error: Content is protected !!