India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார். கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கர்ஜித்து வரும் நிலையில், அவருடன் தங்கையும் இணையவிருப்பதை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விடையளிக்க, 3 மணிக்கு 3 தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். தேவேந்திர ஃபட்நாவிஸ் (பாஜக), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார், இந்த மூவரில் யார் முதல்வராக வருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மஹாராஷ்டிராவில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் உடைந்து எதிரெதிராக இருப்பது பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனலாம். ஆனால், ஜார்க்கண்டில் ஆளும் ஹேமந்த் சோரனை (JMM கட்சி) வீழ்த்த பாஜக மேற்கொண்ட எல்லா தந்திரங்களும் தோல்வியில் முடிந்துள்ளன. ED வழக்கு, சிறைவாசம், CM பதவி ராஜிநாமா, நம்பிக்கை வைத்த சம்பாய் சோரன் செய்த துரோகம் எல்லாவற்றையும் தாண்டி வெற்றியை தொட்டிருக்கிறார் ஹேமந்த் சோரன்.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகி இருக்கும் நிலையில், தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், அனைத்து மொழி பேசுபவர்களும் வசிக்கும் ஒரு குட்டி இந்தியா தான் மகாராஷ்டிரா. அதனால்தான், பாஜக அங்கு வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன். அங்கு பாஜக பெற்றிருப்பது சரித்திர வெற்றி எனக் கூறினார்.
கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில நடைபெற்றது. நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் பேசுகையில், இப்படியொரு அறிவார்ந்த போட்டிக்கு ஏற்பாடு செய்த எனது அருமை தங்கை கனிமொழிக்கு வாழ்த்துகள். பாசத்தை பொழிகையில் அவர் கனிமொழி. தமிழக உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் கர்ஜனை மொழி. மொத்தத்தில் ஒரு வீரமங்கை நம் கனிமொழி என பாராட்டினார்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றிக்கு பின் மிகப்பெரிய சதி இருப்பதாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார். ”இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இது எப்படி நடந்தது என மக்களே நம்ப மாட்டார்கள். தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது.” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருக்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வயநாடு இடைத்தேர்தலில் ராகுலை விட பிரியங்கா அதிக வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார். ராகுல் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தற்போது இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே 3.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்கை பிரியங்கா, அண்ணனை முந்தியுள்ளார். இதன் மூலம் இந்திரா என்ற பெண் சிங்கம் மீண்டும் உருவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. இதில், ஆளும் ஜேஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகவிருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. பண மோசடி புகாரில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஹேமந்த் சோரன் 5 மாதங்கள் சிறை செல்ல நேரிட்டது. ஜாமினில் வெளியே வந்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்கப் போவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், சயானி கோலிவாடா தொகுதியைக் கைப்பற்ற போகும் பாஜகவின் கேட்பன் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தேவேந்திர ஃபட்னாவீஸுக்கு மிக நெருக்கமானவர். தற்போது ஃபட்னாவீஸ்தான் அடுத்த முதல்வர் என்ற பேச்சு உள்ளதால், தமிழ்ச்செல்வன் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.