News November 23, 2024

ஆபத்தான கண் இமை Dandruff பற்றி தெரியுமா?

image

மருத்துவர்கள் முடியில் போலவே கண் இமையிலும் பொடுகு வரும் என்கிறார்கள். இரவில் தூங்கும் போது eyeliner, mascara கண்ணில் வைத்திருப்பதும், அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாக இது ஏற்படலாம் என்கிறார்கள். இதனை முறையாக கையாளாவிட்டால், கண் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை உண்டாக்குமாம். தொடர் கண் எரிச்சல், கண் இமை இழப்பு, கண்கள் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு இவை வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

News November 23, 2024

வலுவான நிலையில் இந்திய அணி

image

IND-AUS அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் IND 172/0 எடுத்துள்ளது. IND முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸி. அணி 104 ரன்களுக்கும் சுருண்டது. பின்னர் 2வது இன்னிங்ஸை அதிரடியாக துவங்கிய IND ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் 90* ராகுல் 62* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதன்மூலம் IND அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி வெற்றி பெறுமா?

News November 23, 2024

244ஆவது தேர்தலிலும் பத்மராஜன் தோல்வி!

image

வயநாடு இடைத்தேர்தலில் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 256 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இது அவருக்கு 244வது தேர்தல் ஆகும். சேலத்தை சேர்ந்த இவர் கடந்த 34 ஆண்டுகளில் வேட்புமனுவுக்காக பல கோடி செலவு செய்துள்ளார். இவர் பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் உள்ளிட்டோருக்கு எதிராகக் களம் கண்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

மகாராஷ்டிர முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் குழப்பம்

image

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய பட்னவீஸ், 3 கட்சிகளும் அமர்ந்து பேசி அடுத்த முடிவை எடுக்கும் என அறிவித்தார். இதனால் முதல்வராக அடுத்து யார் வருவது என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

News November 23, 2024

மத்திய அமைச்சரின் மகன் தோல்வி

image

மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, கர்நாடகா இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். சென்னபட்னா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட நிகில், 25,413 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வராவிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளார். ‘ஜேகுவார்’ என்ற கன்னட படத்தில் நிகில் ஹீரோவாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

EPS உடன் கருத்து வேறுபாடா? எஸ்.பி.வேலுமணி பதில்

image

சமீபகாலமாக, EPSக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு விளக்கமளித்து எஸ்.பி.வேலுமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கும் EPSக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மகனின் திருமண அழைப்பிதழை வழங்கவே நயினார் நாகேந்திரனை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

News November 23, 2024

Idea கொடுத்த டிரம்ப்: பிரபல டிவி சேனலை வாங்கும் மஸ்க்

image

அமெரிக்க செய்தி சேனலான MSNBC’யை X தளத்தின் CEO எலோன் மஸ்க் வாங்க திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. டிரம்ப் ஜூனியர், MSNBC விற்பனைக்கு உள்ளது என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், “விலை எவ்வளவு எனக் கேட்டிருந்தார். அதேபோல், 2017ல் டிவிட்டரை நீங்கள் வாங்கவேண்டும் என டேவ் ஸ்மித் என்பவர் குறிப்பிட, அப்போதும் விலை எவ்வளவு எனக் கேட்டிருந்தார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

அடுத்த CM என் தந்தைதான்: ஷிண்டே மகன் அதிரடி

image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியானதை அடுத்து, அடுத்த முதல்வர் ஃபட்னாவீஸா அல்லது ஏக்நாத் ஷிண்டேவா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீநாத் ஷிண்டே கூறுகையில், வளர்ச்சியை மட்டுமே மனதில் வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். என்னை பொறுத்தவரை, எனது தந்தை தான் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் எனக் கூறினார்.

News November 23, 2024

இன்று, நாளை மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, இன்றும், நாளையும் மிதமான மழையும், நவ.25இல் இருந்து 4 நாளைக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி மயிலாடுதுறை நாகை, தஞ்சை, திருவாரூரில் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 23, 2024

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கிடையாது: மூர்த்தி

image

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்துனான ஆய்வுக்கூட அனுமதி கிடையாது எனக் கூறிய அவர், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வராது என உறுதியளித்தார்.

error: Content is protected !!