News November 23, 2024

யானை தாக்கி இருவர் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தாக்கியதில் கடந்த 18ஆம் தேதி இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தெய்வானை யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர், இருவரது குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

News November 23, 2024

மகாராஷ்டிரா CM ஏக்நாத் ஷிண்டே அபார வெற்றி

image

மகாராஷ்டிரா சட்டமன்றத்தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் போட்டியிட்ட கோப்ரி-பச்பகாடி சட்டமன்றத் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனாவின் (யுபிடி) கேதார் பிரகாஷ் டிகேவை 1,20,717 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

News November 23, 2024

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல்

image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மகாராஷ்டிர தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்யும் எனக் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்த அந்த மாநில மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி

image

இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு பிரியங்கா நன்றி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், தம் மீது வயநாடு மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். இந்த வெற்றியானது வயநாடு மக்களுக்கான வெற்றி என்றும், இதை தனது பணிகள் மூலம் வயநாடு மக்களை உணரச் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 23, 2024

ஸ்விகியில் ‘Condom’ ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!

image

டெல்லியில் ஸ்விகி மூலம் Condom ஆர்டர் செய்த ஒருவரின் தூக்கம் கலைந்துள்ளது. சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஒரு நபர், வழக்கமாக பிளிங்கிட் மூலம் காண்டம் வாங்குவேன், மூடிய கவரில் பாதுகாப்பாக அனுப்புவார்கள். இந்த முறை ஸ்விகியில் ஆர்டர் செய்தேன், சாதாரண கவரில் வெளிப்படையாக தெரியும்படி பேக் செய்துள்ளனர். நான் இடியட் மாதிரி பார்சலை ஆபீஸ் ரிசப்ஷனில் வைக்க சொல்லி மானம் போய்விட்டது என பதிவிட்டுள்ளார்.

News November 23, 2024

ஜார்கண்டின் ‘ஷிண்டே’சம்பாய் சோரன் வெற்றி!

image

ஜார்கண்ட் தேர்தலில் செரைகெல்லா தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட சம்பாய் சோரன் 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் JMM கட்சி வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். இந்த தொகுதியில் சம்பாய் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்த சம்பாய் சோரன் மூலம் பழங்குடிகளின் வாக்குகளை கவர பாஜக திட்டமிட்டது. ஆனால் அதனை முறியடித்து அங்கு JMM ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

News November 23, 2024

அதானிக்கு அமெரிக்கா சம்மன்

image

அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 21 நாள்களுக்குள் நேரில் ஆஜராகாவிட்டால், தீர்ப்பு அவர்களுக்கு எதிராக உள்ளிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களை பெற ₹2,000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

News November 23, 2024

கேரளா: 3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்!

image

கேரளாவில் வயநாடு மக்களவை, பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் வயநாட்டில் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று 4,10,931 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாலக்காட்டில் காங்கிரஸின் ராகுல் மம்கூடத்தில் 58,389 வாக்குகளும், செலக்கரா தொகுதியில் ஆளும் LDF வேட்பாளர் பிரதீப் 64,827 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

News November 23, 2024

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

image

நல்லாட்சிக்கு வெற்றி தந்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி என PM மோடி கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றதை அடுத்து களத்தில் பணியாற்றிய NDA கூட்டணி நிர்வாகிகளை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதேபோல, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் வென்ற ஹேமந்த் சோரன் (JMM) கூட்டணியை வாழ்த்திய அவர், மக்கள் பிரச்னைக்காக BJP தொடர்ந்து குரல் கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.

News November 23, 2024

நாளை கடைசி: வங்கியில் 600 பணியிடங்கள்

image

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.24) கடைசி தேதியாகும். Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹9,000. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>BOM<<>> முகவரியை கிளிக் செய்யவும்.

error: Content is protected !!