India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவிற்கு ஆதரவளித்தது ஏன் என நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளார். சுயமாக வளர்ந்த நயன், இப்படி ஒரு பகிரங்க கடிதத்தை காரணம் இல்லாமல் எழுதியிருக்க மாட்டார். சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தானும் அதுபோன்ற சம்பவங்களை கடந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.யில் 9 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2இல் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், “தேர்தலை ஊழலுக்கு இணையாக ஆக்கியவர்களின் தந்திரங்களை உலகுக்கு காட்டும் நேரம் வந்துவிட்டது. உண்மையான போராட்டம் தொடங்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகக் கூடும் என்று வெளியான தகவலை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மறுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழல் தங்களுக்கு எழவில்லை என்றும், இதற்காக நெஞ்சை பிளந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கேள்விக்கு, சரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
திரைத்துறையில் சனாதன சக்திகள் ஓங்கி விடக்கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்ததிலிருந்தே இவர்களுக்கு சமூக பொறுப்புணர்வு இருப்பது புரிகிறது. சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற உணர்வு இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, மஞ்சள், வேப்பிலைகளை உண்டு தனது மனைவி கேன்சரில் இருந்து குணமானதாக கூறியிருந்தார். ஆனால், இதுபோன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத முறைகளை மக்கள் நம்ப வேண்டாம் என டாடா ஹாஸ்பிடலின் 262 டாக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை. கேன்சர் அறிகுறி இருந்தால் உடனே டாக்டரை அணுகவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்காக PM மோடிக்கு, அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், நல்லாட்சி வழங்கிய ஆளும் NDA கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊழல், அதிகார ஆசை, பிரித்தாளும் குணமுள்ள சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
நியாய விலைக் கடைகளில் சில ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்காமல் இருப்பர். சிலர் வேறு நபர்களிடம் அளித்து பொருள் வாங்க சொல்வார்கள்.. அவர்களுக்காக TN அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பொருள் வாங்க விருப்பமில்லாதோர் ரேஷன் அட்டையை பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) ஆக www.tnpds.gov.in இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
ஆட்சியில் திமுக ஒருபோதும் பங்கு தராது என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும், அமைச்சருமான ஐ. பெரியசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். கூட்டணி இல்லாமல் திமுக, அதிமுகவால் வெல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை என்றும், திமுக ஆட்சிதான் நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஐநா அமைதிப்படையின் அங்கமாக லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா என மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது. ஐநா அமைதிப்படையில் 5,000 இந்திய வீரர்கள் உலகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தேர்தலில் பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில CM ஹேமந்த் சோரன் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கம்லியல் ஹெம்ப்ரோம் 55,821 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். மாநிலத்தில் INDIA கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. மெஜாரிட்டிக்கு 41 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில், இக்கூட்டணி 55 இடங்களில் வென்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.