India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CM ஸ்டாலினும், ராமதாஸும் ஒரே மேடையில் தோன்றப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் CM பங்கேற்கும் நிலையில், ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்படும் என மினிஸ்டர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு கூட்டணிக்கு வித்திடுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த நெய்யில்தான் விலங்கு கொழுப்பு இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தில் 14 மணி நேரமாக நடைபெற்ற உணவுத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றிருக்கிறது.
இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் Auctionஇல் முக்கிய வீரர்கள் பலர் ஏலம் விடப்பட இருக்கின்றனர். குறிப்பாக, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ஜோஸ் பட்லர், இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், யுசி சாஹல், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச்செல் ஸ்டார்க், டேவிட் மில்லர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஏலத்திற்கு வரவுள்ளனர். இதில் யார் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை தவிர, உப்பு, டீ தூள், சாம்பார் பொடி போன்ற மளிகைப் பொருட்களும் விற்கப்படுகின்றன. இதனை பெரும்பாலானோர் வாங்காத போதிலும், அவற்றை கட்டாயப்படுத்தி ரேஷன் ஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், கார்டுதாரர்களின் விருப்பமில்லாமல் மளிகைப் பொருட்களை விற்கவே கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1859ஆம் ஆண்டு இதே நாளில்தான் சார்லஸ் டார்வின் ’Origin of Species’ என்ற தன்னுடைய நூலை வெளியிட்டார். இந்தப் புத்தகம் பல எதிர்ப்புகளை சந்தித்தாலும், அறிவியல் உலகின் புதிய திறவுகோலாக இந்த கருத்தாக்கம் மாறியது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்தான் உயிரினங்கள் தோன்றுகின்றன என்ற அவரது கூற்றுதான் ‘குரங்கில் இருந்து மனிதன் வந்தான்’ என்ற அடிப்படைக்கு ஆதாரமானது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மகாயுதி கூட்டணி வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோருக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் மீதும், பாஜக ஆட்சி மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த வெற்றிக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (26.11.2024) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
ஓய்வூதியம், மானியம் பெறுவோரின் வங்கி கணக்குகளை எக்காரணம் கொண்டும் முடக்கக் கூடாது என வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. தனியார் வங்கிகளின் இயக்குநர்களுடன் RBI துணை கவர்னர் சுவாமிநாதன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, KYC பெறுவது அவசியம்தான் என்றாலும், வாடிக்கையாளர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வதும் அவசியம் என்றார். சேவை தரத்தை அதிகரிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக இன்று நடைபெறுகிறது. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏல பட்டியலில் மொத்தம் 1,574 வீரர்கள் உள்ளனர். 10 அணிகளில் மொத்தம் 204 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. அவற்றில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது. ஐபிஎல் 18ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.