India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பல தேர்வுகள் தென் இந்தியாவின் பண்டிகை நாட்களில் நடத்தப்படுவதும் அதற்கு கண்டனங்கள் வருவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் பொங்கல் அன்று CA தேர்வுகள் நடத்தப்படுவதை மதுரை எம்பி சு.வெங்கடேசன் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால், நமது பண்பாட்டு பண்டிகையான பொங்கலை தேர்வர்கள் தவறவிட நேரிடும்.
நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் காதலில் இருப்பதாக பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த பதிலையும் அவர்கள் இருவரும் சொன்னதில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்றது போன்ற போட்டோவை ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, காதல் பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பேச்சும் டோலிவுட்டில் உள்ளது.
உ.பி.யில் பல ஆண்டுகளாக சமாஜ்வாடி கோட்டையாக இருந்த குந்தர்கி தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது. 65% முஸ்லிம்கள் வசிக்கும் இத்தொகுதியில் பல கட்சிகள் 11 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், சிங்கிள் இந்து வேட்பாளராக களம் கண்ட பாஜகவின் ராம்வீர் தாக்குர், அனைவரையும் தோற்கடித்து வாகை சூடியுள்ளார். முஸ்லிம்களுடன் பல ஆண்டுகளாக சகோதர உணர்வுடன் இவர் பழகி வந்ததே இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மியில் ₹20,000ஐ இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான அருண் குமாருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ₹20 ஆயிரத்தைக் கொண்டு ரம்மி விளையாடியிருக்கிறார். அதில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.
சூதில் தர்மனே அனைத்தையும் இழந்தான் என்று புராணம் இருக்கையில், நாம் எல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு நாளும் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை என்ற செய்தியை கேட்கும்போதெல்லாம் இதனை தடுக்க அரசு ஏதாவது செய்யாதா என்று தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனாலும், அரசாங்கம் ஏதோ கிணற்றில் போட்ட கல் போல இந்த விவகாரத்தை வேடிக்கை பார்க்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ!
பேட்டி ஒன்றில் பேசும் போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஒரு Mock(கேலி) விருது விழாவில் அனைத்து பிரபலங்களையும் கலாய்க்கும் வகையில் நான் சில விஷயங்களை செய்தேன். அப்போது, மேடையில் SK எமோஷனலாக பேசியதை கேலி கிண்டல் செய்யும் விதத்தில் பேசிவிட்டேன். அது அப்போது தவறாக தெரியவில்லை. ஆனால், டிவியில் பார்த்தபோது எனக்கே தவறாக தெரிந்தது. உடனடியாக SK’விடம் மன்னிப்பு கேட்டேன் எனக் குறிப்பிட்டார்.
RTM (Right-to-Match) என்பது வீரர் ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஏலத்தின் போது, அவரை தக்கவைக்க உதவும். (எ.கா) DC’யில் விளையாடிய பண்ட்டை ₹10 கோடிக்கு CSK வாங்கினாலும், RTM பயன்படுத்தி DC அவரை தக்கவைக்கலாம். ஆனால், விலையை CSK ₹13 கோடியாக உயர்த்தினால், அவ்விலையை கொடுத்தே, பண்ட்டை DC’யால் தக்கவைக்க முடியும். இல்லையேல் பண்ட் CSK’யில் விளையாடுவார். Stay tuned with Way2News for IPL updates.
திருச்செந்தூர் யானை மிதித்து உயிரிழந்த பாகம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ₹2 லட்சம் நிதியுதவி வழங்கியதை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ₹10 லட்சம் வழங்கும் அரசு, இது போன்ற மரணங்களுக்கு ₹2 லட்சம் மட்டுமே வழங்குகிறது. இந்த அரசிடம் நிதியுதவி பெற கள்ளச்சாராயம் குடித்து இறக்க வேண்டும் போல” என்று அவர் கேலி செய்துள்ளார்.
G PAY, PHONE PE போன்ற செயலிகளை ஹேக் செய்து மிகப்பெரிய மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம் எச்சரித்துள்ளது. திடீரென உருவாகும் வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிஎம் கிஷான் யோஜனா’ என்ற பெயரில் ஒரு APP லிங்க்-ஐ மோசடியாளர்கள் அனுப்புவார்களாம். இதனை க்ளிக் செய்தால், நமது G PAY, PHONE PE போன்றவற்றை ஹேக் செய்து அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை அவர்கள் எடுத்து விடுவார்களாம். உஷார் மக்களே.. Share It.
திமுகவினருக்கு உதயநிதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. வெற்றி என்பது தெரிந்ததுதான். ஆனால், எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறோம் என்பதுதான் விஷயம். 200 தொகுதிகளை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.