India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெட்டாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள் பட்டியல்:
1. ரிஷப் பண்ட் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 27 கோடி.
2. ஷ்ரேயாஸ் ஐயர் – பஞ்சாப் கிங்ஸ் ரூ. 26.75 கோடி.
3. அர்ஷ்தீப் சிங் – பஞ்சாப் கிங்ஸ் ரூ. 18 கோடி.
4. யுஸ்வேந்திர சாஹல் – பஞ்சாப் கிங்ஸ் ரூ. 18 கோடி
5. ஜோஸ் பட்லர் – குஜராத் டைட்டன்ஸ் ரூ. 15.75 கோடி
திராவிட மாடல் ஆட்சியின் இலட்சணம் USA-வரை சென்று தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரிப்பதாக சீமான் சாடியுள்ளார். மின்சார வாரியத்தின் ஒப்பந்தம் பெறுவதற்காக திமுக ஆட்சி நிர்வாகத்திற்கு அதானி குழுமம் லஞ்சத்தை வாரி வழங்கியிருப்பது அம்பலமாகி இருப்பதாகவும், இது குறித்து CM ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு வந்த அதானி CM-ஐ ரகசியமாக சந்தித்தது ஏன் என கேட்டுள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இலவசமாக கார் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. 45 நாள்கள் வாகன ஓட்டுநர், 30 நாள்கள் போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச கல்வித் தகுதி 8,10, 12ஆம் வகுப்பு ஆகும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இத்திட்டத்துக்கு www.nanmudhalvan.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
பாகிஸ்தானில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்கள் 2 பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவினரை சன்னி பிரிவினர் தாக்கியதால் கலவரம் வெடித்தது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர்.
தெலங்கானாவின் கரீம்நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளை பெற்றுள்ளார். TGT, PGT, Junior Lecturer, Group-4, TGPSC முடிவுகளில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது கங்காதாரா நலப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அவர், ஒவ்வொரு தேர்வையும் சவாலாக எடுத்துக்கொண்டதால் இது சாத்தியமானதாக கூறுகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 51சதங்கள் விளாசி முதலிடத்தில் இந்திய அணி முன்னாள் கேப்டன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதற்கடுத்து இன்னொரு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 36 சதங்கள் அடித்து 5ஆவது இடம் வகிக்கிறார். முன்னாள் ஜாம்பவனான கவாஸ்கர் 34 சதங்கள் அடித்து 8ஆவது இடத்திலும், விராட் கோலி 30 சதங்கள் குவித்து 16ஆவது இடத்திலும் உள்ளனர். இதற்கடுத்து சேவாக் 23 சதங்களுடன் 29ஆவது இடத்தில் உள்ளார்.
BMW இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், 2 சீரிஸ் கிரான், 3 சீரிஸ் LWB, 5 சீரிஸ், 7 சீரிஸ், X1, X3, X5, X7 மற்றும் M340i கார்களின் விலை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 3% உயர்த்தப்படுகிறது. இதனால் இந்தியாவில் மெசிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை புத்தாண்டு முதல் ₹2 லட்சம்- ₹9 லட்சம் வரை உயர்வை காண்கிறது.
மகாராஷ்டிராவில் BJP தலைமையிலான மஹாயுதி கூட்டணி விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அமைக்க உரிமை கோர உள்ளது. நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என ஷிண்டே அணியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டும் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருக்கான ரேஸில் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே உள்ளனர்.
இடைத்தேர்தல்களில் இனி போட்டியிட மாட்டோம் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்., பை-எலெக்ஷனில் அதிக அளவில் முறைகேடு நடப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய அவர், கள்ள ஒட்டுகள் போடப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உ.பி., இடைத்தேர்தலில் போட்டியிட்ட 9 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்தது.
குறைந்த விலைக்கு கார் வாங்க வேண்டும் என்று விரும்புவோரின் முதல் தேர்வு மாருதி சுஜூகியின் ஆல்டோ காராகவே இருக்கும். விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்த இக்கார்களுக்கு தற்போது இந்தியர்கள் இடையே மவுசு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரியில் 12,395ஆக இருந்த விற்பனை, அக்டோபரில் 8,548ஆக சரிந்து உள்ளது. 2023 அக்டோபரில் 11,200 விற்பனையானது. நீங்க என்ன கார் வச்சிருக்கீங்க. கீழே பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.