India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IND வீரர் ஷ்ரேயஸ் ஐயரை ஐபிஎல் மெகா ஏலத்தில் PBKS அணி ₹26.75 கோடிக்கு வாங்கியது. அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. 2 இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்து மெகா ஏலத்திற்கு வந்த PBKS அணிக்கு முதலில் தேவைப்பட்டது ஒரு நல்ல கேப்டன் தான். இதனால் தான் கடுமையான போட்டிக்கு நடுவிலும் அவரை வாங்கியது. 2024லில் கோப்பையை வென்ற KKR அணி கேப்டன் ஷ்ரேயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக டிச.21ஆம் தேதி இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஷோ அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்தியப் படம் ஒன்று அமெரிக்காவில் ப்ரீ ரிலீஸ் ஷோ செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் ஊழலுக்கு எதிராக போராடும் IAS அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டிகளால் ரன் மெஷினாக திகழ்ந்த டேவிட் வார்னர் ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. மூன்றாவது சுற்றில் அவரது பெயரை அறிவித்த போது அணியின் உரிமையாளர்கள் அமைதி காத்ததால், Unsold Player ஆக அறிவிக்கப்பட்டார். கடந்த சீசனில் டெல்லி அணிக்காக அவர் விளையாடியிருந்தார். ஆஸ்திரேலிய வீரரான அவர் அனைத்து வித போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸி.,-யின் இளம் சிங்கம் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை, டெல்லி அணி ₹9 கோடிக்கு வாங்கியுள்ளது. கடந்த சீசனிலும் டெல்லி அணிக்காக ஆடிய ஜேக், தன்னுடைய மிரட்டலான ஆட்டத்தால் கவனம் பெற்றார். 22 வயது சின்ன பையன் இப்படி அடிச்சு பொளக்குறானே என சீனியர்களே இவரை பாராட்டினர். இருப்பினும், சர்வதேச போட்டிகளில் அவர் சொதப்பினார். IPL-ல் மட்டும்தான் இவர் ருத்ர தாண்டவம் ஆடுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று இபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரான மறைந்த எம்ஜிஆரின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ஜானகியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய இபிஎஸ், நாட்டிலேயே முதலாவதாக தமிழகம் வர அதிமுகதான் காரணம் என்று தெரிவித்தார். அதிமுகவை முடக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. அதிமுகவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு KKR வாங்கியது. ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்தில் இறங்கிய அவருக்கு LSG, KKR, RCB போட்டியிட்டன. வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக கடந்த சீசன்களில் முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினார். பண்ட், ஸ்ரேயாஸ் ஐயரை தொடந்து அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகள் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய மராட்டிய காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரும், கர்நாடக அமைச்சருமான பரமேஸ்வர் கூட்டணிக்குள் பல்வேறு குறைகள் இருந்ததாக ஆதங்கப்பட்டார். மேலும், தேர்தல் சமயத்தில் காங்., சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் இடையே தேவைப்பட்ட ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
உ.பி. மாநிலம் ஜான்சியில் அரசு ஹாஸ்பிடலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள ஜான்சி லட்சுமிபாய் மருத்துவமனையில் மின்கசிவால் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மேலும் சில குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த குழந்தைகளில் மேலும் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
தமிழக வீரர் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை அணி இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் சென்னை அணி ரூ.9.75 கோடிக்கு அஸ்வினை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து மீண்டும் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே முதல் வீரராக NZ வீரர் டெவோன் கான்வேயை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 2 கோடி Base Price இருந்த அவரை கடும் போட்டிக்கு நடுவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதைப்போல இந்திய பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதியை ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
Sorry, no posts matched your criteria.