News November 25, 2024

சபரிமலையில் 9 நாள் வருவாய் ₹41 கோடி

image

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15ஆம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. அதிலிருந்து 9 நாள்களில் (23ஆம் தேதி வரை) 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம். காணிக்கை மற்றும் பிரசாத விற்பனையில் வருவாயாக ₹41 கோடியே 64 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ₹13 கோடி அதிகம்.

News November 25, 2024

அமைகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?

image

மகாராஷ்டிராவில் நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், உடனடியாக ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் BJP உள்ளது. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெறாததால் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், புதன்கிழமை ஜனாதிபதி ஆட்சி அமையலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சில நாள் அவகாசம் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

News November 25, 2024

கடின இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியா

image

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்க்ஸில் இரண்டு அணிகளும் சொதப்பியபோதும் இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், கோலி சதம் கண்டனர். இதனால், 524 என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அளித்துள்ளது. ஆனால், ஆஸி அணி ஏற்கெனவே 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

News November 25, 2024

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி இல்லாத நிலை

image

மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற ஒரு கட்சி, குறைந்தபட்சம் 10% MLAக்களை கொண்டிருக்க வேண்டும். அதாவது 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 28 தொகுதிகள் தேவை. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சிக்கும் அத்தனை MLAக்கள் கிடைக்காததால், 57 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி இல்லாத சட்டசபை அம்மாநிலத்தில் அமையவுள்ளது. இது ஆளும் பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

News November 25, 2024

இன்று வலுபெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை (26.11.24) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 25, 2024

சோமவார சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டால்…

image

சக்திக்கு ஆடி வெள்ளி; சிவனுக்கு கார்த்திகை திங்கள் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை சோமவார நாட்களில் (திங்கள்கிழமை) அதிகாலையிலேயே நீராடி, சிவாஷ்டகம் பாடி, திருநீறிட்டு சிவனுக்கு விரதமிருந்து, மாலையில் திருவள்ளூரை அடுத்துள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று
சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு ஈசனை தரிசித்தால் தீர்க்க முடியாத சண்டை சச்சரவுகளும் தீரும் என்பது ஐதீகம்.

News November 25, 2024

வேகமாக பரவுகிறது டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா: உஷார்

image

தமிழகத்தில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்குனியா காய்ச்சல் தீவிரமடைந்து வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பிட்டலுக்கு வரும் குழந்தைகளில் 40% பேருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ 2 நாளுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

News November 25, 2024

அசுர வளர்ச்சியில் ஆன்லைன் வாகன காப்பீடு

image

இந்தியாவில் ஆன்லைன் மூலம் வாகன காப்பீடு பெறுவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மெட்ரோ நகரங்களில் ஆன்லைன் வாகன காப்பீடு 35% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி சிறு நகரங்களில் 70%ஆகவும், கிராமங்களில் 110%ஆகவும் இருப்பதாக பாலிசிபஜார் தரவுகள் காட்டுகின்றன. டிஜிட்டல் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, இணைய வசதி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

News November 25, 2024

தமிழகத்தில் வாழ்க்கை தரம் சிறப்பு: சத்யராஜ்

image

தமிழகத்தை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டுமென சத்யராஜ் தெரிவித்துள்ளார். முத்தமிழ் பேரவையின் பொன்விழாவில் பங்கேற்று பேசிய அவர், பல மொழி படங்களில் நடிப்பதாகவும், இதற்காக வெவ்வேறு ஊருக்கும் சென்றுவிட்டு வரும்போதுதான் தமிழகத்தின் வளர்ச்சி தெரிவதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் வாழ்க்கை தரம் சிறப்பாக இருப்பதாகவும், நம் மக்கள் நன்றாக படித்து முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 25, 2024

மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

image

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!