News November 25, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) சிரிக்க வைக்கும் வாயு எது? 2) BIS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி யார்? 4) ராஜ நாகத்தின் அறிவியல் பெயர் என்ன? 5) ‘கடல் புறா’ நூலின் ஆசிரியர் யார்? 6) முதல் கர்நாடகப் போர் எப்போது நடந்தது? 7) நிலவில் காலடி எடுத்து வைத்த 2ஆவது மனிதர் யார்? 8) உலகளவில் அதிக கார் திருட்டு நடக்கும் நாடு எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 25, 2024

தங்கம் விலை ₹800 குறைவு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹800 குறைந்திருக்கிறது. நேற்று ₹58,400க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,600க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹7,200யாக உள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ₹3,000 வரை உயர்ந்த நிலையில் இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ₹101 என விற்கப்படுகிறது.

News November 25, 2024

மீண்டும் அனலை கிளப்பும் வக்பு திருத்த மசோதா விவகாரம்

image

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் விவாதத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

News November 25, 2024

முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே மிகுந்த ஏற்றம் கண்டிருக்கின்றன. தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி 357 புள்ளிகள் உயர்ந்து 24,264 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. ரிலையன்ஸ், HDFC வங்கி, ICICI வங்கி, லார்சன் ஆகிய நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. கடந்த வாரம் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகளும் இன்று ஏற்றம் கண்டிருக்கின்றன.

News November 25, 2024

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வலியுறுத்தல்

image

தமிழகத்தை 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என மூன்றாக பிரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதிகளை தனியாக பிரிக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். இந்த கருத்தை திராவிட மற்றும் தமிழ் தேசியக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News November 25, 2024

அரசின் அலட்சியம்… கூகுள் மேப் கோளாறு… நேர்ந்த துயரம்!

image

உ.பி., பரேலியில் கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை பின்பற்றி கேட்பாரற்று கிடந்த மேம்பாலத்தில் பயணித்த கார், கீழே விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2022இல் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட பலத்தை அம்மாநில அரசு சீரமைக்கவில்லை. பாலம் இடிந்த சம்பவம், கூகுள் மேப்பில் தற்போது வரை அப்டேட் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. இனியாவது அலட்சியத்தை அரசு கைவிடுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News November 25, 2024

ஆட்டநாள் தொடக்கத்திலேயே விக்கெட் காலி

image

BGT தொடரின் நான்காவது நாளான இன்று தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்திருக்கிறது. ஆஸ்திரேலியா. 534 என்ற இமாலய இலக்கை துரத்தும் அந்த அணி, 8.30 மணி நேர நிலவரப்படி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிராஜின் பந்தில் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து கவாஜா வெளியேறினார்.

News November 25, 2024

போராட்டத்தில் குதிக்கும் தமிழக அரசு டாக்டர்கள்!

image

அரசு ஹாஸ்பிட்டல்களில் இன்று முதல் ஆய்வு கூட்டங்களை புறக்கணிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். மகப்பேறு மரணங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில் டாக்டர்களுக்கு மிரட்டல்கள், துன்புறுத்தல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் TNGDA ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், பிரச்னைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் நாளை அவசரம் அல்லாத அனைத்து சிகிச்சைகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

அது அவர்களின் தலைவிதி: கங்கனா ஆவேசம்

image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், உத்தவ் தாக்கரேவின் இந்த மோசமான படுதோல்வி, நான் எதிர்பார்த்த ஒன்றுதான். பெண்களை மதிக்க தெரியாத அசுரர்களுக்கு இது சரியான முடிவுதான். இது அவர்களின் தலைவிதி எனக் கூறினார். விதிமுறை மீறி கட்டப்பட்டதாக மும்பையில் கங்கனாவின் வீடு உத்தவ் ஆட்சியில் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 25, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் டிங் லிரேன், இந்தியாவின் குகேஷ் ஆகியோர் மோதுகின்றனர். டிச.13 வரை நடக்கும் இந்த போட்டி 14 சுற்றுகளைக் கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைப் புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

error: Content is protected !!