India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆணவத்துடன் பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல என முதல்வர் ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை என முதல்வர் கூறியதை ஏற்க முடியாது என்றும், முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வார்த்தையை அளந்து பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார். தன் தவற்றை உணர்ந்து முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்வாளர்களுக்கு TNPSC அமைப்பு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் விடைத்தாளில் தேவையில்லாத வார்த்தைகள், கிறுக்கல்களை எழுதக் கூடாது என்றும், பிறர் இடத்தில் இருந்து தேர்வு எழுதக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இந்தத் தவறை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
IPL 2024 சீசனில் டெல்லி கேபிடெல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக இருந்தார். ஆனால் இந்தமுறை, அவரை ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ வாங்கியது. இதனால் 2025 சீசனில் டெல்லி கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்ற கேள்வியெழுந்தது. இதுகுறித்து பதிலளித்த டெல்லி அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால், கே.எல். ராகுல், அக்சர் படேல் ஆகிய 2 பேரும் கேப்டனாக செயல்படுவர் என்று அறிவித்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விட்டது. இதையடுத்து, பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை நோக்கி நகரும் போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வங்கக்கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் உத்தரவிட்டுள்ளது.
பழங்களில் கண்ணுக்குத் தெரிந்த வகையில் உள்ள தூசு & கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை நீக்கவே நீரில் கழுவுகிறோம். பாத்திரத்தில் பிடித்து வைத்த நீரில் ஒருபோதும் பழங்களைக் கழுவக் கூடாது. ஓடுகிற நீரிலேயே கிருமிகள் அழியும் என்பதால், நீர் ஊற்றித்தான் அவற்றை நன்கு கழுவ வேண்டும். இல்லையெனில் கிருமிநாசினியான உப்பு, மஞ்சள் கலந்த வெந்நீரில் பொறுமையாக அலசலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
1) சிரிக்க வைக்கும் வாயு – நைட்ரஸ் ஆக்சைடு 2) BIS – Bureau of Indian Standards 3) இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி – கிரண் பேடி 4) ராஜ நாகத்தின் அறிவியல் பெயர் – ஓபியோபகஸ் ஹன்னா 5) ‘கடல் புறா’ நூலின் ஆசிரியர் – சாண்டில்யன் 6) முதல் கர்நாடகப் போர் 1746-1748 வரை நடந்தது 7) நிலவில் காலடி எடுத்து வைத்த 2ஆவது மனிதர் – எட்வின் ஆல்ட்ரின் 8) உலக அளவில் அதிக கார் திருட்டு நடக்கும் நாடு – USA.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மழையை எதிர்கொள்ள தயாரா என முதல்வர் ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எந்தவிதமான மழையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பதிலளித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், 1907 ஆம் ஆண்டின் திருமணத்திற்கு மாறான உறவு சட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் திருமணம் மீறிய உறவில் இருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த புதிய சட்டத்தில் நியூயார்க் ஆளுநர் Kathy Hochul கையெழுத்திட்டார். அதேநேரத்தில், அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா, மிச்சிகன், விஸ்கோன்சின் ஆகிய மாகாணங்களில் கள்ளத் தொடர்பு மிகப்பெரிய குற்றமாகும்.
தங்கத்தைப் போல வெள்ளியை முதலீடாக கருதினால், அதை ETF வடிவில் வாங்கலாமென நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அக்.31 உடன் முடிந்த கடந்த ஓராண்டில், வெள்ளி ETFகள் 32% வருவாய் ஈட்டி கொடுத்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் வெள்ளி தேவைப்படுவதால், பல நாடுகள் அதை கொள்முதல் செய்கின்றன. இதற்கு GST உள்ளிட்ட செலவுகள் உண்டென்பதால் 10% Portfolio-ஐ வெள்ளிக்கு ஒதுக்கலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.