India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெட்டாவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தின் 2வது நாளில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 7 கோடிக்கு வாங்கியது. அதைப்போல இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவை RCB அணி 5.75 கோடிக்கு வாங்கியது. க்ருனால் பாண்டியாவை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல் கடுமையாக முயற்சி செய்த நிலையில், இறுதியில் அவரை RCB தட்டி தூக்கியது.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான புவனேஷ்வர் குமாரை எந்த அணி வாங்கும் என பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. இன்று நடைபெற்று வரும் ஏலத்தில், அவரை வாங்க RCB, LSG, MI அணிகள் கடுமையாக போட்டியிட்டன. இறுதியில், RCB அணி புவனேஸ்வர் குமாரை ₹10.75 கோடிக்கு வாங்கியது. 2022’ல் 4.2 கோடிக்கு SRH அணியால் வாங்கப்பட்ட இவரை, RCB அணி 156% அதிக விலைக்கு வாங்கியுள்ளது.
CSK’வில் விளையாடிய வலது கை Medium pacer துஷார் தேஷ்பாண்டேவை ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ₹ 6.50 வாங்கியுள்ளது. சென்னை அணி அவருக்காக மீண்டும் ஏலம் கேட்ட போதும், விலை அதிகரித்ததை தொடர்ந்து சென்னை அணி விலக, அவரை ராஜஸ்தான் வாங்கியது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் WHATSAPP WEB VERSION சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, WHATSAPP பெர்சனல், பிசினஸ் ஆகிய 2 WEB VERSION சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தகவல் அனுப்ப முடியாமல் பயனாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. உங்கள் WHATSAPP WEB VERSION செயல்படுகிறதா? கீழே உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
ஐபிஎல் மெகா ஏலத்தின் 2வது நாளில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைடன்ஸ் அணி ரூ.3.20 கோடிக்கு வாங்கியுள்ளது. முதல் நாளில் அணிகள் ஏறக்குறைய பிளேயிங் 11க்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்ததால் 2வது நாள் வீரர்கள் மீதிருந்த ஆர்வம் குறைந்தது. மேலும் இன்று CSK அணி முதல் வீரராக CSK ரசிகர்களால் ‘சுட்டிக்குழந்தை’ என்று அழைக்கப்பட்ட சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு மீண்டும் வாங்கியது
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளது என வேதனை தெரிவித்த அவர், சமூகத்தின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள் என புகழாரம் சூட்டினார்.
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை எப்போதும் ஏற்ற இறக்கங்களை கண்டு கொண்டே இருக்கின்றன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL ஏலத்தில், தற்போது வரை இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரஹானே, பிரித்வி ஷா, சர்துல் தாகூர், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன் ஆகியோரை ஏலத்தில் யாருமே வாங்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை – தமிழகம் நோக்கி நகரும். இது புயலாக மாறுமா என்பதை கண்காணித்து வருகிறோம் எனக் கூறிய அவர், பலத்த காற்று வீசும் என்பதால், ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
வருடாந்திர முடிவையொட்டி, ஸ்டாக் கிளியரன்சுக்காக 2023 மாடல் கார்கள் விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் VENUE ரூ.76,000, மாருதி BALENO ரூ.83,000, ஹோண்டா City ரூ.1.14 லட்சம், கியா SELTOS ரூ.2.21 லட்சம், மஹிந்திரா Thar ரூ.3 லட்சம், கியா EV6 ரூ.10 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் அவற்றின் விலை பல லட்சம் வரை குறைந்துள்ளது. நீங்க என்ன கார் வாங்க போறீங்க? கீழே கமெண்ட் பண்ணுங்க.
உ.பி.யில் சம்பல் மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே நடந்த கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டுள்ள பதிவில், உ.பி.யின் எல்லா இடங்களிலும் விஷம் பரப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன் இருப்பவரை மனிதர்களாகவே அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் விலங்குகளாகி விட்டனர். வாழ்க இந்தியா என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.