News November 25, 2024

SHOCK NEWS: ஜிபே, போன் பே மூலம் ரூ.1,087 கோடி மோசடி

image

ஜிபே, போன் பே உள்ளிட்ட யுபிஐ மூலம் நாட்டு மக்களிடம் ரூ.1,087 கோடி மோசடி நடந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 நிதியாண்டில் 13.42 லட்சம் மோசடிகள் நடந்துள்ளதாகவும், ரூ.1,087 கோடி சுருட்டப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இது கடந்தாண்டுடன் (ரூ.573 கோடி) ஒப்பிடுகையில் 85% அதிகமெனவும் குறிப்பிட்டார்.

News November 25, 2024

IPL Auction: அறிமுக வீரருக்கு நிலவிய கடும் போட்டி

image

இதுவரை IPL போட்டியில், விளையாடாத இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யாவிற்கு ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. அடிப்படை விலையாக இவருக்கு ₹30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இவரை வாங்க PBKS, RCB அணிகள் கடும் போட்டி போட்டன. 10 மடங்கு விலை அதிகமான நிலையில், RCB அணி பின்வாங்க, ₹3.80 கோடிக்கு PBKS அணி வாங்கியது. இவர் முதல் தர டி20யில், 11 போட்டியில் 356 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும்.

News November 25, 2024

TNPSC: 4 நாள்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

TNPSC, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அரசுப் பணி போட்டித் தேர்வர்கள், தனியார் நிறுவனங்களில் பல லட்சம் கட்டி பயிற்சி பெறுவதுண்டு. ஆனால் சிலர் பணம் கட்ட முடியாமல் இருப்பர். அவர்களுக்காக அரசு இலவச பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. “கல்வி டிவி”யில் இன்று முதல் 29ஆம் தேதி வரை காலை 7-9 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நேரலையாக நடத்தப்படுகிறது. இதன் மறுஒளிபரப்பு இரவு 7-9 மணி ஒளிபரப்பாகும்.

News November 25, 2024

நைட் 10 மணி வரை மழை அலர்ட்

image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே இருக்கும் பொதுமக்கள், பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 25, 2024

இ-சேவை மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு பஸ் பாஸ்

image

மாற்றுத் திறனாளிகள், புற்றுநோயாளிகள் முதலிய பயணக் கட்டண சலுகை பெறுவோருக்கு இ-சேவை மையத்தில் பஸ் பாஸ் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக TN அரசு தெரிவித்துள்ளது. அந்த பாஸை அரசு போக்குவரத்து கழக இடங்களில் சென்று தற்போது அவர்கள் பெறுகின்றனர். இந்நிலையில், முதல்கட்டமாக மாநகர் பஸ்களுக்கான பாஸ், இ-சேவை மையங்களில் வழங்கப்படுவதாக அரசு கூறியுள்ளது.

News November 25, 2024

இது கோலியின் குழந்தை இல்லையா?

image

பெர்த்தில் நேற்று நடந்த BGT முதல் டெஸ்ட் போட்டியின் போது, வைரலான குழந்தை அனுஷ்கா – விராட் கோலியின் குழந்தை என கூறினார்கள். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது அகாய் இல்லை என விராட் கோலியின் சகோதரி பாவனா கோலி சமூக வலைதளம் மூலம் விளக்கமளித்துள்ளார். அக்குழந்தை அனுஷ்கா ஷர்மாவின் தோழியின் மகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 25, 2024

தமிழக வீரருக்கு RTM பயன்படுத்திய GT

image

ஐபிஎல் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரை, GT அணி RTM பயன்படுத்தி தக்கவைத்து கொண்டுள்ளது. ₹90 லட்சம் வரை PBKS, GT அணிகள் அவருக்காக போட்டியிட்டன. அப்போது, GT அணி RTM பயன்படுத்தி தக்கவைக்க முயன்றது. உடனே, PBKS அணி விலையை ₹90 லட்சத்தில் இருந்து ₹2 கோடிக்கு உயர்த்தியது. இருப்பினும், GT அணி ₹2 கோடிக்கு அவரை தக்கவைத்து கொண்டது. Stay tuned with Way2News for live IPL Auction Updates

News November 25, 2024

தீபத் திருநாளில் தி.மலையில் அன்னதானம் செய்யனுமா?

image

தி.மலையில் டிச.13இல் நடைபெறவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது ஏற்றப்படும் மகா தீபத்தை காண லட்சக்கணக்கானோர் குவிவார்கள். அப்போது அன்னதானம் வழங்கினால் புண்ணியம் என்று பலரும் அன்னதானம் அளிப்பார்கள். இந்தாண்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் ஆன்லைன், தி.மலையில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் டிச.4 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2024

அதானி வழங்கிய ரூ.100 கோடியை நிராகரித்த T.G.

image

அதானி பவுண்டேசன் வழங்க முன்வந்த ரூ.100 கோடியை தெலங்கானா (T.G.) நிராகரித்து விட்டதாக CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்க A.P. உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அதானி குழுமம் சுமார் ரூ.2,000 கோடி லஞ்சம் காெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், யங் இந்தியா திறன் பல்கலை.க்கு அதானி பவுண்டேசன் அளித்த தொகையை நிராகரித்து விட்டதாக ரேவந்த் கூறியுள்ளார்.

News November 25, 2024

`தீபாவளி போனஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

விக்ராந்த் நடிப்பில் வெளியான `தீபாவளி போனஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. விக்ராந்த், ரித்விகா இணைந்து நடித்த இப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது. மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படத்தை ஜெயபால்.ஜே இயக்கியுள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தின் எதார்த்தத்தை பேசியுள்ள இப்படம் வரும் நாளை ( நவ.26) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

error: Content is protected !!