India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரெட் அலர்ட் போன்ற மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டால், முதல் நாள் இரவே விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், முதல் மாவட்டமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் லீவ் இருக்கா, இல்லையா என குழப்பமடைந்துள்ளனர்.
PHD மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஆராய்ச்சி நிதியுதவி பெற வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று TN அரசு அறிவித்துள்ளது. PHD மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் முழுநேரமாக பயிலும் பிஎச்டி ஆய்வு மாணவர்கள் தலா 10 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000, இதர செலவுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது. கூடுதல் தகவலை www.tanscst.tn.gov.in தெரிந்து கொள்ளலாம்.
Paytm UPI Liteல் ஆட்டோ டாப்-அப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. வாலட் பேலன்ஸ் நிர்ணயித்த வரம்பிற்குக் கீழே செல்லும் போது, ஆட்டோ டாப்-அப் நிகழும். இதனை பயன்படுத்த, முதலில் யூசர்ஸ் தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, குறைந்தபட்ச இருப்பு வரம்பை நிர்ணயிக்க வேண்டும். மேலும், ஆட்டோ டாப்-ஆப்பிற்கான ரீசார்ஜ் தொகையையும் தேர்வு செய்யணும். யூசர்ஸ் வாலட் லிமிட்டை ₹2,000 வரை உயர்த்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எதிரொலியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், சென்னையில் திமுக வர்த்தக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், உதயநிதியின் பிறந்தநாளை நவ.27- டிசம்பர் 26 வரை சிறப்பாக கொண்டாடுவது என்றும், அந்த நாள்களில் அரசு ஹாஸ்பிடல்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
EVM இயந்திரம் மீது தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என Cong எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். EVM செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் விளக்க வேண்டும் என குறிப்பிட்ட கார்த்தி, EVM முறைகேடு தொடர்பாக அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லாதவரை தனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்றார். INDIA கூட்டணித் தலைவர்கள் EVMஇல் முறைகேடு நடப்பதாக குறைகூறி வருகிறார்கள்.
அரசியலமைப்பு முகப்புரையில் உள்ள SECULAR, SOCIALIST வார்த்தைகளை நீக்கக்கோரும் மனுவை SC தள்ளுபடி செய்தது. சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது SC இன்று தீர்ப்பளித்தது. அப்போது, அரசியலமைப்பு திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட அந்த வார்த்தைகளை 44 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த சட்ட காரணம், நீதி இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா மோகன். அவர் தற்போது புதிதாக புகைப்படங்களை எடுத்து சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் அழகாக பல பாவனைகளில் அவர் அந்த புகைப்படங்களில் ஜொலிக்கிறார். இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் 5 அடி அல்வா போல இருக்கிறார் என புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலே கிளிக் செய்து நீங்கள் அந்த படங்களை காணலாம்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், தேர்வு நேரத்தில் மாணவர்கள் பரிதவிப்பதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தற்காலிக ஆசிரியர்களில் பலர் B.ED., கல்வித்தகுதி பெறாதவர்கள் என தகவல் வருகிறது. எனவே, BT/BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் இருந்து நிரப்ப வேண்டும் என்றும், தேர்வு நடத்தாத மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கு உடனே தேர்வு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் மூலம் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக ஆக.13இல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடன் 7 பேர் கைதான நிலையில், தேவநாதனின் சொத்துக்கள் தற்போது முடக்கப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.