News November 26, 2024

தமிழ்நாட்டை புரட்டி போட்ட புயல்கள்

image

2010 நவ.6இல் ஜல் புயல் 111 கி.மீ. வேகத்தில் சென்னையை கடந்து சென்றது. இந்த புயலால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2017 நவ.30இல் உருவான ஒக்கி புயலால் குமரியில் கடும் பாதிப்பு, உயிரிழப்பு ஏற்பட்டது. 2018இல் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டதில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2020இல் உருவான நிவர் புயலால், வேலூர், கடலூர், விழுப்புரம், தி.மலை, டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

News November 26, 2024

1 வருடத்தில் 195 நாடுகளுக்கு பயணித்து சாதனை

image

பலருக்கு இங்கு ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே கனவாக உள்ளது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்த Lexi Alford என்ற பெண் 21 வயதில் 195 நாடுகளுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் எலெக்ட்ரிக் காரில் உலகை சுற்றிய முதல் நபர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 200 நாட்கள் காரில் 6 கண்டங்களுக்கு பயணித்துள்ளார். நீங்கள் அதிகமாக எத்தனை நாடுகளுக்கு சென்றுள்ளீர்கள்?

News November 26, 2024

33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

அடுத்த 3 மணி நேர மழை நிலவரம் குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசியில் மழை கொட்டும் எனக் கூறியுள்ளது. 12 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

உடனே நோட் பண்ணுங்க: உதவி பெற அவசர உதவி எண்கள்

image

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அவசரகால செயற்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்திற்கு 1800-233-4233, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 04364-222588 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்திற்கு WHATSAPP எண் 94885 47941, கடலூர் மாவட்டத்திற்கு WHATSAPP எண் 94899 30520 அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1077 என்ற இலவச எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

மழைக்கால சளி தொல்லையா? டிப்ஸ் இதோ..

image

மழைக்காலங்களில் பலருக்கு சளி பிடிப்பது வழக்கம். இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுனா சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
*வெதுவெதுப்பான நீரில் சிறிது சீரகத்தை கலந்து குடித்துவர சளி, வறட்டு இருமல் குணமாகும்.
*சுடு நீரில் எலுமிச்சை சாரை விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
*பாலுடன், மிளகுத் தூள், மஞ்சள் தூளை கலந்து ஒரு வாரம் குடித்து வர மார்பு சளி கரையும்.

News November 26, 2024

லலித் மோடி இந்தியாவை விட்டு சென்றது ஏன்?

image

தாய்லாந்தில் வசித்து வரும் IPL நிறுவனர் லலித் மோடி, கடந்த 2010-ல் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய மறுத்ததால் கேங்ஸ்டர் தாவுத் இப்ராஹிம் தன்னை கொல்ல முயன்றதாகவும், 12 மணி நேரம் மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என போலீஸ் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாளை இந்தியா வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News November 26, 2024

சுற்றுலாவிற்காக எல்லையை திறந்துவிடும் ராணுவம்

image

எல்லைப்புற ஊரகப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த, இதுவரை தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிகளை ராணுவம் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் Vibrant Village திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வான் நினைவிடம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அரசு அதிகாரிகளுடன், ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

News November 26, 2024

இன்ஸ்டாகிராமிலும் LIVE LOCATION வசதி

image

இன்ஸ்டாகிராம் செயலியில் LIVE LOCATION SHARE செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. WHATSAPPஇல் LIVE LOCATION-ஐ பிறருக்கு அனுப்பும் வசதி உள்ளது. அதேபோன்ற வசதி, இன்ஸ்டாகிராமில் இல்லாமல் இருந்தது. அந்த குறையை சரி செய்யும் நோக்கில், இன்ஸ்டாகிராம் தற்போது அதனை அறிமுகம் செய்துள்ளது. WHATSAPPஇல் 8 மணி நேரம் வரை LIVE LOCATION அறியலாம். ஆனால், இன்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் மட்டுமே அறிய முடியும்.

News November 26, 2024

எங்கள் தைரியத்தை சோதித்த நாள்: சச்சின்

image

மும்பை தீவிரவாத தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நவம்பர் 26, 2008 இந்தியாவை சோதித்த போதும், நாம் தைரியத்தை விட்டுவிடவில்லை. அன்று நமது வீரர்கள் காட்டிய துணிச்சலும், மும்பையின் ஒவ்வொரு குடிமகனின் விடாமுயற்சியும் ஒரு தேசமாக நமது பலத்தை எப்போதும் நமக்கு நினைவூட்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

News November 26, 2024

முதல்வர் பயணம் ரத்து

image

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முதல்வரின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நவ.28, 29ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி, கள ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!