News November 27, 2024

மகாராஷ்டிர தேர்தலில் அதானி தலையீடு: கார்கே புகார்

image

மகாராஷ்டிர தேர்தலில் அதானியின் தலையீடு இருந்ததாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அரசு கொள்ளையடித்து வருவதாகவும், அதில் கிடைத்ததை அதானி, அம்பானி, அவர்களைப் போன்ற தொழிலதிபர்களுக்கு அளிப்பதாகவும் சாடியுள்ளார். அதானிக்கு மோடி ஏராளமானதை அளித்துள்ளதாகவும், அதை அவர் மகாராஷ்டிர தேர்தலில் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

News November 27, 2024

கத்தி முனையில் நடக்கிறோம்: SC தலைமை நீதிபதி கருத்து

image

நீதிபதிகளின் பணி கத்தி முனையில் நடப்பது போன்றது என்று சுப்ரீம் கோர்ட் (SC) தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். நீதிபதிகள் பிறப்பிக்கும் ஒவ்வொரு தீர்ப்பிலும் உரிமையும், கடமையும் சமமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வழக்கில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கும் வேளையில், தோற்றவர்களிடம் இருந்து விமர்சனங்கள் வருவது வழக்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 27, 2024

ராசி பலன்கள் (27-11-2024)

image

➤மேஷம் – தனம் ➤ ரிஷபம் – நலம்
➤மிதுனம் – ஊக்கம் ➤கடகம் – புகழ்
➤சிம்மம் – லாபம் ➤கன்னி – பெருமை
➤துலாம் – கவனம் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி
➤தனுசு – கீர்த்தி ➤மகரம்- மறதி
➤கும்பம் – இன்பம் ➤மீனம் – இரக்கம்.

News November 27, 2024

5ஜி பயனர் எண்ணிக்கை 97 கோடியாக உயரும் என கணிப்பு

image

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5ஜி பயனர்கள் எண்ணிக்கை 97 கோடியாக உயரும் என எரிக்சன் நிறுவனம் கணித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 27 கோடியாக அதிகரிக்கும் என்றும், இந்த எண்ணிக்கை தற்போது பயனில் உள்ள செல்போன் பயனர்கள் எண்ணிக்கையில் 23% என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நீங்கள் பயன்படுத்துவது 4ஜி சேவையா? 5ஜி சேவையா? உங்கள் கமெண்ட்ஸை கீழே பதிவிடுங்கள்.

News November 26, 2024

10 மாவட்டங்களில் விடுமுறை

image

தமிழ்நாட்டில் கனமழை எதிரொலியாக 10ஆவது மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

வருகிற 29ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

image

டெல்லியில் வருகிற 29ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடுகிறது. அண்மையில் முடிந்த மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 2 மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணி தோற்று, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லியில் 29ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அந்தத் தோல்வி குறித்து விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News November 26, 2024

அரசியலமைப்பின் உண்மை பாதுகாவலர் பாஜகதான்: நட்டா

image

அரசியலமைப்பு சட்டத்தின் உண்மையான பாதுகாவலர் பாஜகதான் என்று அக்கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசுகளால் அரசியலமைப்பின் முக்கிய சாராம்சங்கள் திரும்பத் திரும்ப நசுக்கப்பட்டதாகவும், ஆனால் அதை பாதுகாத்து மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்தியில் ஆளும் மோடி அரசு, கூட்டுறவு கூட்டாட்சிக்காக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

ரிஷப் பண்ட் பிரிவது வருத்தம்

image

டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரிஷப் பண்ட் பிரிவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாக, அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் கூறியுள்ளார். இதுதொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், நீங்கள் எப்போதும் எனது இளைய சகோதரராக இருப்பீர்கள் எனக் கூறியுள்ளார். மேலும், பண்டை தனது குடும்பத்தில் ஒருவராக நினைப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். ரிஷப் பண்டை லக்னோ அணி ₹27 கோடிக்கு வாங்கியது.

News November 26, 2024

BREAKING: 9 மாவட்டங்களில் விடுமுறை

image

கனமழை எதிரொலியாக மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், தஞ்சை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர், மயிலாடுதுறை, நாகை, சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

News November 26, 2024

ரூ.1.22 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய எண்ணெய் நிறுவனங்கள்

image

பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1.22 லட்சம் கோடி வருவாய் ஈட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், கலால் வரி மூலம் இந்த வருவாய் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டு முழுவதும் கலால் வரி மூலம் ரூ.2.74 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. அதில் இத்தொகை 48% ஆகும். 2020-21 முதல் வருவாய் குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!