India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது, பல மாதங்களாக எடுத்த முயற்சிகளின் பலன் என ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரவேற்றுள்ளார். ஆனால், காசாவில் இன்னும் போர் ஓயவில்லை என்பதை மறக்கக்கூடாது எனவும், ஹிஸ்புல்லா உடனான போர் நிறுத்தம், காசாவுக்கான வழியை திறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் அமைதி நிலவ ஃபிரான்ஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்துள்ளார்.
2026 தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது DMKவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என சீமான் கணித்துள்ளார். தன்னுடைய தேர்தல் ஸ்டேட்டர்ஜி என்ன என்பது வரும் 2026ல் தெரியவரும் என்றும் அப்போது தனது ஆட்டத்தை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் தெரிவித்தார். தமிழக அரசு ₹1,900 கோடிக்கு ரேஷன் பொருள்கள் சிந்தியதாக கணக்கெழுதி இருப்பது குறித்து ஒருவரும் பேசவில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நேற்று வரை மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்த இந்த மண்டலம், நேற்றிரவு 10 கிமீ வேகத்திலும் இன்று காலை 13 கிமீ வேகத்திலும் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 590 கிமீ தொலைவில் இருக்கும் இந்த மண்டலம், இன்னும் 12 மணி நேரத்திற்குள் புயலாக மாறவிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து 4 நாட்கள் கடந்து விட்ட போதிலும், இன்னும் மகாராஷ்டிராவின் முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. நேற்று ஷிண்டே ராஜினாமா செய்த நிலையில், பட்னவிஸ் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இன்றி தேர்வு நடைபெற வேண்டும் என்பதாலேயே நேரம் எடுப்பதாக பாஜக மூத்தத் தலைவர் கூறுகிறார்.
சென்னை வேளச்சேரியில் 60 வயது நபருடன் ரூம் போட்டு 6 பீர் குடித்த 27 வயது பெண் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இருவரும் விடிய விடிய குடித்ததாகவும் அதிகாலை 4 மணியளவில் அப்பெண் நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும் உடனிருந்த நபர் தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் அப்பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களை குறிப்பாக X- தளத்தை குறைவாக பயன்படுத்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். அது நமது நேரத்தை விழுங்கிவிடுவதாகவும், மற்றவர்களின் எண்ணத்தை நமது திணிக்கும் ஊடகமாக சமூக வலைதளங்கள் மாறி இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த பேச்சிற்காக எலான் மஸ்க் தனது கணக்கை பிளாக் செய்தால், அதுவே தனது முதல் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தம் என்பது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் எனவும், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் இஸ்ரேல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், போர் நிறுத்தம் முழுமையாக அமலாவது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டிச.1ம் தேதி சென்னை திரும்புகிறார். அவர் தமிழகம் திரும்பியதும் பல்வேறு அரசியல் செயல்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘என் மண் என் மக்கள்’ 2ம் கட்ட நடைபயணத்திற்கு அவர் தயாராக உள்ளதாகவும், கடந்த தேர்தல்களில் பாஜக சிறப்பாக செயல்பட்ட தொகுதிகளை குறிவைத்து நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலாக உள்ளது. தற்போது நீலகிரி, பெரம்பலூர், கோவை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்கப்படும் போது கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை வழங்கினால், ₹10 திரும்ப வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய கே.எல்.ராகுல், இதில் 3ஆவதாக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியதால், ஜெய்ஸ்வாலுடன் அவர் ஓப்பனிங் இறங்குவார். ஷுப்மன் கில், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஆனால், துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.