News July 10, 2025

ஜூலை 10… வரலாற்றில் இன்று!

image

*1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி – வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர். *1949 – கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் *1973 – வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் *2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

News July 10, 2025

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி..!

image

இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்கும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் அனுமதியை IN-SPACE மையம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 4408 முதல் தலைமுறை செயற்கை கோள்கள் இந்திய வான் எல்லை பகுதியில் செயல்பட தொடங்கும் என்றும், இதனால் 600 Gbps வேகத்தில் இணைய சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

image

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

News July 10, 2025

கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

image

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.

News July 10, 2025

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News July 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 391 ▶குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ▶ பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.

News July 10, 2025

வங்கதேசத்துக்கு பதில் இலங்கை? பிசிசிஐ முடிவு

image

இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் சென்று ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது. தற்போது இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை சென்று 3 ODI, 3 T20கள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் உள்ளன. இருகிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், ஆகஸ்ட்டில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.

News July 10, 2025

ஹீரோவாக அறிமுகமாகும் ரெட்ரோ பட வில்லன்..!

image

ரெட்ரோவில் வில்லனாக நடித்தவர் விது. தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விது இதன் முன்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

News July 10, 2025

‘கார்த்தி 29’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

image

கார்த்தியின் 29-வது படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார். கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இது உருவாக உள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். படத்தில் வில்லனாக நிவின் பாலியும், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை பூஜையுடன் தொடங்கவுள்ளது.

News July 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.

error: Content is protected !!