India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திராவிடம், தமிழ்த்தேசியம் வேறு வேறு அல்ல, திராவிடம், தமிழ் தேசியத்தின் வேர் என்பதை நிலைநாட்ட உதயநிதியின் தேவை காலத்தின் கட்டாயம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அவர், “கலைஞரின் கருத்தியல் பெயரனாய் களமாட, ஊடுருவும் சனாதனப் பகை வெல்ல வாழ்த்துகள்” என்றும் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஷமியை எடுக்காதது ஏன் என குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் நெஹ்ரா விளக்கம் அளித்துள்ளார். ஷமியை தக்க வைக்கும் திட்டம் இருந்ததாகவும், ஆனால் நிறைய வீரர்களை Retain செய்ததால் ஷமியை விடுவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஷமியின் விலை எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால், RTM வாய்ப்பை பயன்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். SRH அணி ஷமியை ₹10 கோடிக்கு வாங்கியுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக் கவிதை ஒன்றை வைரமுத்து எழுதியிருக்கிறார். அதில், “தம்பீ வா, தலைமையேற்க வா” என்று உதயநிதிக்கு அவர் அழைப்பு விடுக்கிறார். திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதிதான் பதவியேற்க வேண்டும் என்று திமுகவினர் பலர் பேசி வரும் நிலையில் வைரமுத்துவின் இந்தப் பதிவு கவனம் பெற்றிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஜப்பானில் ஒருவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம்தான் வைரலாகி வருகிறது. மற்றவர்களின் வீட்டுக் கதவை உடைத்து அத்துமீறி நுழைவது தனது Hobby என அவர் தெரிவித்துள்ளார். யாரென்றே தெரியாதவர்களின் வீட்டுக்குள் நுழைந்து பிடிபடுவோமா, இல்லையா என்ற த்ரில், மன அழுத்தத்தை குறைப்பதாகவும், இதுவரை 1000 முறை இப்படி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாங்கள் தெரிவித்த விமர்சனத்தை உணர்வுப்பூர்வமாக அணுகிய பண்ட், தன்னை மெகா ஏலத்தில் எடுக்க வேண்டாம் என கூறியதாக DC அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் விளக்கமளித்துள்ளார். பண்ட் உடன் நிறைய விவாதித்ததாகவும், ஆனால் அது எல்லாமே தோல்வியில் முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பண்ட்டை வாங்க வேண்டும் என மனதார விரும்பியதால் தான் ஏலத்தில் RTM பயன்படுத்த முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று உருவாகவிருக்கும் ஃபெங்கல் புயல் வரும் 30ஆம் தேதி இரவு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே கரையைத் தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னையில் 29ஆம் தேதி கனமழையும் 30ஆம் தேதி மிக கனமழையும் பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. என்ன மக்களே? ரெடியா?
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 2018இல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, 44 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி முடிந்ததும் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
அதானி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அமளி காரணமாக அன்றைய தினம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதனையடுத்து, இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நானும் ரவுடி தான் பட விவகாரத்தில் நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர தனுஷின் Wunderbar நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Wunderbar நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றதை அடுத்து தனுஷை கடுமையாக சாடி நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரம் கோடி முறைகேடு புகாரில் சிக்கிய அதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அதானி ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பிய அவர், நிச்சயம் மறுக்கத்தான் செய்வார் எனவும் சாடினார். மேலும், சிறையில் அடைக்கப்பட வேண்டிய அதானியை மத்திய அரசு பாதுகாப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.