India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்கல் புயல் உருவாக இருப்பதால், தமிழகத்தையொட்டிய கடல்பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழக கடலோர பகுதிகளிலும், மன்னார் வளைகுடா பகுதிகளிலும் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என MET எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதலால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களை உடனடியாக கரைக்கு திரும்பும்படியும், அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமெனவும் MET எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கார்களுக்கு எவ்வளவு வரி தெரியுமா? கார் விலையில் கிட்டத்தட்ட பாதி வாரியாக கொடுக்கணும். GST 28%, செஸ் 17%, Ex-ஷோரூம் விலையில் சேருகிறது. மேலும், காப்பீட்டில் 15-20% சாலை வரி, 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. கார் விலை ₹10 லட்சமாக இருந்தால் 1% TCS இருக்கும். (எ.க) காரின் Ex-ஷோரூம் விலை ₹10 லட்சமாக இருந்தால், ₹3.11 லட்சம் வரியாக கட்டவேண்டும். மேலும், சாலை வரியாக ₹2 லட்சமும் செலுத்த வேண்டும்.
சையது முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுராவிற்கு எதிரான போட்டியில் குஜராத்தின் உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் டி20யில் ரிஷப் பண்ட் (32 பந்துகள்) சாதனையை முறியடித்து அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படேல் படைத்துள்ளார். இப்போட்டியில் குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் உர்விலை எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சுஹாசினி குற்றஞ்சாட்டியுள்ளார். மலையாள நடிகைகள் சிலர் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுஹாசினி, மலையாள சினிமா துறையில் புதிதாக நடிக்க வரும் பெண்களிடம் சிலர் தவறாக நடப்பதாக சாடினார். அதுபோல யார் நடந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 15 பைசா குறைந்தது. அதன்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ₹83.44 ஆக குறைந்துள்ளது. எனினும், ரூபாய் குறியீட்டின் சரிவு மற்றும் ப்ரெண்ட் கச்சா குறியீட்டில் ஏற்பட்ட சரிவு காரணமாக உள்நாட்டு வர்த்தகத்தில் மேலும் இழப்புகள் தடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி வரும் புயலின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பௌத்த துறவியாக மாறிய Ven Ajahn Siripanyoன் தந்தை ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவின் முதல் 3 பணக்காரர்களில் ஒருவர். தாயார் தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 18 வயதில் தாய்லாந்து சென்ற சிரிபான்யோ, தற்காலிகமாக புத்த மதத்தை தழுவி, பிறகு வாழ்க்கையையே புத்த மதத்திற்கு அர்ப்பணித்து விட்டார். இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ₹40 ஆயிரம் கோடி. இவரின் தந்தை தான் Aircel நிறுவனத்தின் ஓனர்.
இந்தியர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்ந்து குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2001ஆம் ஆண்டில் 2.90 கோடி குழந்தைகள் பிறந்த நிலையில், 2024-ல் அது 2.30 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும், பிறப்பு விகிதத்தில் இந்தியாவே முதலில் உள்ளது. 88 லட்சம் குழந்தை பிறப்புகளுடன் சீனா 2ஆம் இடத்தில் உள்ளது. 76 லட்சம் குழந்தைகளுடன் நைஜீரியா 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
15 வருடங்களாக ஆண்டனி என்பவரை காதலித்து வருவதாக அறிவித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இது பற்றி,எக்ஸ் தளத்தில், AntoNY x KEerthy ( Iykyk) என்று பதிவிட்டுள்ளார். என்னடா விஷயம் என்று பார்த்தால், கீர்த்தி வளர்த்து வரும் செல்ல பிராணியான நாய் குட்டியின் பெயர் NYKE. ஆண்டனி பெயரில் இருந்து NY’யை எடுத்து, கீர்த்தி சுரேஷில் இருந்து KE’யை எடுத்து NYKE என பெயர் வைத்திருக்கிறார். எப்படிலாம் லவ் பண்றாங்க…
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் நகர்ந்து வருவதாகவும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.