India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (நவ.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.28ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவ.30ஆம் தேதி காலையில் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் அன்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடக்கும். தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி மரக்காணம் – கல்பாக்கம் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 640 Management Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.28) கடைசி நாளாகும். இதற்கு இளங்கலை, பி.டெக் முடித்த 30 வயதுக்குட்பட்டோர் https://www.coalindia.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஊதியம்: ₹ ₹50,000 – 1,60,000. கூடுதல் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.
➤மேஷம் – மகிழ்ச்சி ➤ ரிஷபம் – லாபம்
➤மிதுனம் – முயற்சி ➤கடகம் – உயர்வு
➤சிம்மம் – நன்மை ➤கன்னி – வரவு
➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – சுகம்
➤தனுசு – பயணம் ➤மகரம் – பெருமை
➤கும்பம் – நற்செய்தி ➤மீனம் – பாராட்டு.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். பிறந்தநாளுக்கு தொண்டர்கள் தரும் பரிசு 2026 தேர்தலில் 200 இடங்களில் வெற்றி என்பதுதான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவை 7ஆவது முறையாக அரியணையில் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் வெற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் சிருஷ்டி துலி (25). இவரும், ஆதித்யா பண்டிட் (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆதித்யா பண்டிட் சைவ உணவு பழக்கம் கொண்டவர். இந்நிலையில், அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் சிருஷ்டியை, சைவ உணவுக்கு மாறுமாறு தினமும் டார்ச்சர் செய்துள்ளார் ஆதித்யா. இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்த சிருஷ்டி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS.இளங்கோவனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மூத்த மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் மெடிக்கல் ரிப்போர்ட் வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை அட்டவணையை இறுதி செய்ய வரும் 29ஆம் தேதி ஐசிசி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் பாக்.கில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. பாக். செல்ல இந்திய அணி மறுத்துள்ள நிலையில், தொடரை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக விவாதிக்கவும், அட்டவணையை இறுதி செய்யவும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரபல தொல்லியல் அறிஞர் கே.வி.ராமன் (90) இன்று காலமானார். சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த அவர், வைகை மற்றும் குண்டூர் ஆற்றுப் படுகையில் முதல் அகழாய்வு ஆய்வை மேற்கொண்டு, இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சில பகுதிகளை அப்போது கண்டுபிடித்தார். அதுமட்டுமல்லாமல், அரிக்கமேடு மற்றும் கடல் கொண்ட காவிரிப்பூம்பட்டினம் நகரத்தை அகழாய்வு செய்து, தமிழர் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றினார்.
Sorry, no posts matched your criteria.