News November 28, 2024

நடப்பாண்டில் ₹50,000 கோடி மூலதனம் திரட்டியது SBI

image

SBI நடப்பு நிதியாண்டில் திரட்டிய மூலதனம் ₹50,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்கட்டமைப்பு கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி அண்மையில் ₹10,000 கோடி நிதி திரட்டியதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக, ஏடி1 கடன் பத்திரங்கள், நீண்டகால கடன் பத்திரங்கள் என பல்வேறு வகை பத்திரங்கள் மூலம் ₹40,000 கோடி நிதி திரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளது.

News November 28, 2024

இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெங்கல் புயல் இன்று உருவாகவுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்பு நாகையில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News November 28, 2024

வங்கதேசத்தில் 3 கோயில்கள் மீது தாக்குதல்

image

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. சம்மிலிதா சனாதனி ஜோதே என்ற இந்து அமைப்பின் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுபான்மை இந்துக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், லோகோநாத் கோயில், மான்சா மாதா கோயில் மற்றும் காளி மாதா கோயில் ஆகிய 3 கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News November 28, 2024

ஒற்றை தலைவலி நீக்கும் துளசி டீ..!

image

துளசி டீ உடலில் உள்ள யூரிக் ஆசிட் அளவைக் குறைக்க உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒற்றை தலைவலியைப் போக்கும் இயற்கை நிவாரணியாக செயல்படுவதாகவும், பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகளை அழிக்க உதவுவதாகவும் கூறுகின்றனர். சில துளசி இலைகளை தேவையான அளவு நீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதில், வெல்லம், ஏலக்காய் சேர்த்து வடிகட்டினால் துளசி இலை டீ ரெடி.

News November 28, 2024

ஸ்டாலின்போல அரசியல் ஞானம் இல்லையே: ராமதாஸ்

image

முதல்வர் ஸ்டாலின் போல அரசியல் ஞானம் தனக்கு இல்லையே என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விடுவதாக முதல்வர் விமர்சித்து இருந்தார். இது பாமகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்டாலினை போல பிரகாச அரசியல் ஞான ஒளி தனக்கு இல்லாததால் வருத்தமாக இருப்பதாக ராமதாஸ் அவரை கிண்டல் செய்துள்ளார்.

News November 28, 2024

டிஜிட்டல்மயமாகும் கூட்டுறவு வங்கிகள்

image

கூட்டுறவு வங்கிகள் 2025 மார்ச்சுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும் என நபார்டு தலைவர் ஷாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கும் நாடு முழுவதும் பொதுவான ஒரு பகிரப்பட்ட சேவை நிறுவனத்தை உருவாக்க நபார்டு முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். இதை மத்திய அரசும், RBI-யும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

News November 28, 2024

நவ. 28: வரலாற்றில் இன்று!

image

*1893 – நியூசிலாந்தில் பெண்கள் முதன்முறையாக வாக்களித்தனர். *1912 – உதுமானியப் பேரரசிடம் இருந்து அல்பேனியா விடுதலை. *1964 – செவ்வாய் கிரகத்துக்கு மரைனர் 4 என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 1987 – இந்தியப் பெருங்கடலில் தென்னாப்பிரிக்க விமானம் விழுந்ததில் 159 பேர் பலி. *1997 – இந்திய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ராஜினாமா. *2006 – நேபாள அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான ஆயுத மேலாண்மை ஒப்பந்தம் முடிவு.

News November 28, 2024

வக்பு வாரிய மசோதா குறித்து இன்று தீர்மானம்

image

வக்பு வாரிய மசோதா குறித்து ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு கால அவகாசம் வேண்டுமென கூட்டுக்குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக பார்லிமென்டில் இன்று தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 28, 2024

இன்று பூஜையுடன் தொடங்கும் SK24 படப்பிடிப்பு?

image

சிபி சக்ரவர்த்தி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் SK-க்கு ₹60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் SK-வின் 23ஆவது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2024

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

image

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள். *இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது. *ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *இந்த உலகை மாற்றுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

error: Content is protected !!