India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
USAவில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக அதானி குழுமம் அரசியல் & சட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், அந்நிறுவனத்தில் $50 பில்லியன் முதலீடு செய்யவிருந்த Total Energiesபோன்ற சர்வதேச முதலீட்டாளர்கள், தங்களது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். எதிர்மறை தாக்கங்களால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அந்நிறுவனம் நிதிசார்ந்த அபாயங்களை சந்திக்க நேரிடலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கிரிக்கெட் வீரர்களின் ஜாதகத்தை கணித்து வரும் ஜோதிடர் பிரஷாந்த் கினி, கே.எல்.ராகுலின் ஜாதகத்தையும் கணித்திருக்கிறார். அவர் கூறும் போது, டிச.3ல் இருந்து ராகுலுக்கு நல்ல காலம் பிறக்க போவதாக கணிக்கிறார். IPL 2025ல் அவர் சிறப்பாக ரன்களை குவிப்பார், 2025 செப்.-2026 ஜூன் வரை சர்வதேச கிரிக்கெட்டில் ராகுல் ஜொலிப்பார் என்கிறார். பிப்.2027 வரை ராகுலின் கிரிக்கெட் உச்சத்தில் இருக்கும் என்றும் கூறுகிறார்.
மணிக்கு 280 Km வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ICFஆலை தயாரித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரயில் அதிவேகமாக செல்ல ஏதுவாக குறைந்த எடை, அதிக வெப்பம் தாங்கும் ஆற்றல், காற்று புகாத வகையில் மிக நுட்பமான நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க சுமார் ₹28 கோடி செலவிடப்படுவதாக அறியமுடிகிறது.
ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் 7,105க்கும், சவரன் தங்கம் ரூ.56,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ. 15 குறைந்து ரூ.7,090ஆக விற்கப்படுகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.56,720க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.98க்கும், 1 கிலோ ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரியில் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பைடன் உக்ரைன் ராணுவத்தை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் மேலும் ₹6,120 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்ப வாய்ப்புள்ளதாம். இதற்கான ஒப்புதலை விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை புடின் எச்சரித்து இருந்தார்.
குரூப்-4 கவுன்சிலிங் வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், ஸ்டெனோ தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடந்தது. இதனை 15.91 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 9,491-ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கோளில் மனித குடியேற்றத்தை நிகழ்த்துவது உறுதி என SpaceX CEO எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பூமியில் வாழ முடியாத சூழல் உருவாகும் போது, தன்னுடைய இந்த முயற்சி உயிரினங்களுக்கு கைகொடுக்கும் எனவும், பணத்திற்காக இதை செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, செவ்வாய் கோளில் முதலீடு செய்தால் எவ்வித பொருளாதார பலன்களையும் பெற முடியாது என விண்வெளி இயற்பியலாளர் டைசன், மஸ்கை விமர்சித்து இருந்தார்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை புயலாக வலுவடையலாம் என வானிலை மையம் கணித்திருந்தது. மணிக்கு 10KM வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 3 KM ஆகக் குறைந்தது. தற்போது அதுவும் குறைந்து 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் காய்கறி விலையில் பெரும் தாக்கத்தை மழை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு முருங்கைக்காய் விலை ₹100 அதிகரித்துள்ளது. நேற்று வரை மொத்த விற்பனையில் கிலோ ₹250க்கு விற்பனையான முருங்கைக்காய், இன்று ₹350க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில், சில்லறை வணிகத்தில் கிலோ ₹380 வரையிலும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பில்லா, மங்காத்தா போன்று மிரட்டலான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தன் கெரியர் பெஸ்ட் BGM இப்படத்தில் இருக்கும் என ஜி.வி.பிரகாஷ்குமாரும் வெறி ஏற்றிவிட்டுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.